இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆசிய கோப்பை 2025 செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:01 AM (IST) Sep 21
Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணி இலங்கையை தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றது. வங்கதேச வீரர்கள் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் சூப்பராக செயல்பட்டனர்.
10:44 PM (IST) Sep 20
Asia Cup 2025: இலங்கை வீரர் துனித் வெல்லலகே தந்தை இறந்து இரண்டு நாட்களே ஆன போதிலும், ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.
10:16 PM (IST) Sep 20
புதிய ஒப்போ F31 சீரிஸ் 5G, "The Durable Champion" என்ற பெயருடன் நம்பகத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை மையமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
09:16 PM (IST) Sep 20
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படம் ஆன ‘இட்லி கடை’ ஆக்ஷன், குடும்ப பாசம், காதல் என அனைத்தும் கலந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது.
09:11 PM (IST) Sep 20
Vijay Calls EPS: தவெக தலைவர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் போன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் என்ன பேசினார்கள்? தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்கிறதா? என்பது குறித்து பார்ப்போம்.
08:15 PM (IST) Sep 20
TVK Vijay: முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த விஜய்யை, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஒருமையில் பேசியுள்ளார். மாலையில் திருவாரூரில் டி.ஆர்.பி.ராஜாவை விஜய் தாக்கி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
08:00 PM (IST) Sep 20
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது சினிமா பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய கௌரவம் வழங்கப்படுகிறது.
07:29 PM (IST) Sep 20
திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
07:20 PM (IST) Sep 20
TVK Vijay Campaign: திருவாரூரில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய், இறுதியில் தவெக தொண்டர்களை பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார். அது என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
06:55 PM (IST) Sep 20
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருவாரூரில் நடத்திய பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்தார்.
06:51 PM (IST) Sep 20
மழைக்காலத்தில் உங்கள் வீட்டு கதவு, ஜன்னல் திறக்க முடியாமல் இறுக்கமாக இருக்கிறதா? மிக எளிதாக அதை சரிசெய்துவிடலாம். அது எப்படியென்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
06:37 PM (IST) Sep 20
தனது சொந்த மாவட்டமான திருவாரூரை முதல்வர் ஸ்டாலின் கருவாடு போல் காயவிட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் தனது பேச்சின்போது கடைசி வரை கருணாநிதி பெயரை குறிப்பிடவில்லை.
06:09 PM (IST) Sep 20
நாகையை தொடர்ந்து திருவாரூரில் விஜய் பிரசாரம் செய்கிறார்கள். விஜய்யை காண தவெக தொண்டர்கள் திரண்டதால் கருணாநிதி கோட்டையான திருவாரூர் திணறியது.
06:09 PM (IST) Sep 20
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் பல ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள், பேட்டரி, கேமரா மற்றும் விற்பனை விலை குறித்த விவரங்களை பார்க்கலாம்.
05:09 PM (IST) Sep 20
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த குபேரா மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 உள்பட ஆஸ்கர் ரேஸில் குதித்துள்ள படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
05:04 PM (IST) Sep 20
அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிடம் இருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதங்களைப் பெறுகிறது. பயங்கரவாதப் பிரச்சினைகளில் சவுதி அரேபியா முன்பு இந்தியாவை ஆதரித்ததைப் போல, இந்தியாவும் சவுதி அரேபியாவுடனான தனது உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
04:59 PM (IST) Sep 20
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். நாகை கூட்டத்தை முடித்துக்கொண்டு அவர் திருவாரூருக்குப் புறப்பட்டார்.
04:54 PM (IST) Sep 20
நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் ஒரு பெண் துள்ளிக் குதித்து ஆனந்த கண்ணீரை சிந்தினார். நாகை பிரசாரத்தில் தமிழ்நாட்டு பெண்களின் அண்ணன் நான் என விஜய் பேசியிருந்தார்.
04:43 PM (IST) Sep 20
லப்பர் பந்து படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, தன்னுடைய அடுத்த பட ஹீரோ யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
04:13 PM (IST) Sep 20
குழந்தைகள் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற பெற்றோர் செய்ய வேண்டிய சில விஷயங்களை இங்கு காணலாம்.
04:09 PM (IST) Sep 20
TASMAC Shop: பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில், விதிகளை மீறி டாஸ்மாக் மதுக்கடையை திமுக அரசு அமைத்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியது, வெள்ளநீர் வடிகால் பாதையை மறித்தது போன்ற பல விதிமீறல்கள்.
04:09 PM (IST) Sep 20
H-1B விசாக்களால் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் பயனடைகின்றன. ஜூன் 2025 நிலவரப்படி, அமேசானில் 10,044 ஊழியர்கள் H-1B விசாக்களில் இருந்தனர். டிசிஎஸ் இரண்டாவது இடத்தில் இருந்தது.
04:05 PM (IST) Sep 20
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) பாரம்பரியமாக திமுக பக்கம் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
04:04 PM (IST) Sep 20
Asia Cup 2025: India vs Pakistan: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.
03:56 PM (IST) Sep 20
சின்னத்திரையில் முன்னணி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவற்றில் போட்டிபோட்டு ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் ஐந்து இடங்களை பிடித்த சீரியல்கள் என்னவென்று பார்க்கலாம்.
03:46 PM (IST) Sep 20
நெல்லையில் மனைவி அடிக்கடி போனில் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் கணவர் அன்புராஜ், மனைவி பிரித்திகாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கத்தியால் அறுத்துக் கொலை செய்தார். இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, அன்புராஜ் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
03:40 PM (IST) Sep 20
Shipyard in Thoothukudi : தூத்துக்குடியில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மொத்தம் ₹30,000 கோடி முதலீடு செய்வதன் மூலம், சுமார் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
03:39 PM (IST) Sep 20
சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதற்கும், மத்திய ஆசியாவில் தனது பிடியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் பாகிஸ்தான் அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது. பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் சுமார் 500 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா வழங்குகிறது.
03:13 PM (IST) Sep 20
விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே கவினின் கிஸ் படத்தை விட அதிக வசூலை வாரிக்குவித்து பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்துள்ளது.
03:07 PM (IST) Sep 20
TVK Vijay Campaign: நாகை தேர்தல் பிரசாரத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தான் களத்து வருவது புதுசு இல்லை என்றும் 14 ஆண்டுகளுக்கு முன்பே களத்துக்கு வந்து விட்டதாகவும் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
02:55 PM (IST) Sep 20
நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் பாஜக அரசுகளை விமர்சித்தார். கையில் வேல் ஏந்தியது, சீமானுடனான அவரது அரசியல் மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
02:51 PM (IST) Sep 20
குடும்பத்தை வச்சிட்டு கொள்ளை அடிக்கிற உங்களுக்கே இவ்ளோ இருந்தா, சொந்தமா உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும். பூச்சாண்டி வேலையெல்லாம் விட்டுட்டு நேர்மையா வாங்க பாக்கலாம். குடும்பத்தை வச்சு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கிற நீங்களா? இல்ல, நானா பார்த்துடலாம்
02:50 PM (IST) Sep 20
ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கும் உங்களுக்கு அதிகமாக கோபம் வருவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
02:30 PM (IST) Sep 20
TVK Vijay : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், நாகை பிரச்சாரத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். பிரச்சாரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்த அவர், தனது சனிக்கிழமை பிரச்சார திட்டத்திற்கான காரணத்தையும் விளக்கினார்.
02:29 PM (IST) Sep 20
TVK Vijay: நாகப்பட்டினத்தில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளும் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2026 தேர்தல் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையேதான் போட்டி.
02:22 PM (IST) Sep 20
நாகையில் தேர்தல் பிரசாரத்தில் பிரசாரம் செய்த விஜய், திமுக அரசு தனது பயணத்துக்கு கடும் நெருக்கடி கொடுப்பதாக குற்றம்சாட்டினார். நான் தனி இல்லை. தமிழ்நாட்டு பெண்களின் அண்ணன் என விஜய் தெரிவித்தார்.
02:19 PM (IST) Sep 20
நான் போகிற இடமெல்லாம் மின்சாரத்தை தடை பண்றாங்க. எங்களை பார்த்து அவ்வளவு பயமா? சிம்.எ.சார் தெரியாம கேக்கறேன்..!ஆர்எஸ்எஸ்காரர்கள் வந்தால் கரண்ட் கட் பண்ணுவீங்களா? அமித் ஷா மோடி வணந்ால் கரண்டை கட் பண்ணுவீங்களா? பேஸ்ட்மென்ட் ஆடிடும்.
02:06 PM (IST) Sep 20
2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21 அன்று சர்வ பித்ரு அமாவாசை நாளில் நிகழ்கிறது. இந்தியாவில் இரவில் ஏற்படுவதால் இது தெரியாது, ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பகுதிகளில் தெரியும்.
02:00 PM (IST) Sep 20
நடிகர் விஜய் தனது "உங்கள் விஜய், நான் வரேன்" சுற்றுப்பயணத்தின் நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார்.
01:56 PM (IST) Sep 20
நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள வந்துள்ள நிலையில், அவரைக் காண வந்த பெண் ஒருவர் கூட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார்.