MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • குடும்பத்தோட கொள்ளையடிக்கிற நீங்களா..? இல்ல, நானா..? பார்த்துடுலாம் - ஸ்டாலினுக்கு விஜய் சவால்..!

குடும்பத்தோட கொள்ளையடிக்கிற நீங்களா..? இல்ல, நானா..? பார்த்துடுலாம் - ஸ்டாலினுக்கு விஜய் சவால்..!

குடும்பத்தை வச்சிட்டு கொள்ளை அடிக்கிற உங்களுக்கே இவ்ளோ இருந்தா, சொந்தமா உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும். பூச்சாண்டி வேலையெல்லாம் விட்டுட்டு நேர்மையா வாங்க பாக்கலாம். குடும்பத்தை வச்சு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கிற நீங்களா? இல்ல, நானா பார்த்துடலாம்

3 Min read
Author : Thiraviya raj
Published : Sep 20 2025, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மிரட்டி பார்க்கிறீர்களா?
Image Credit : Asianet News

மிரட்டி பார்க்கிறீர்களா?

‘‘என் மக்களை என் குடும்பத்தை என் சொந்தங்களை நான் பார்க்க போனால் என்ன பண்ணுவீர்கள்… அப்போதும் தடை போடுவீர்களா.. வேண்டாம் சார் இந்த அடக்குமுறை, அராஜக எல்லாம் வேண்டாம்’’ என விஜய் திமுகவை எச்சரித்துள்ளார்.

உங்கள் விஜய் நான் வருகிறேன் பயணத்தில் பயணத்தில் பேசிய விஜய், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ ஆர் எஸ் எஸ் தலைவரோ இங்கு வந்தால் இது போன்ற கண்டிஷனும், பவர் கட், ஒயர் கட், போன்றவற்றை செய்வீர்களா…பண்ணி தான் பாருங்களேன் உங்க பேஸ்மென்ட் அதிரும் இல்ல... நீங்க தான் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே. இந்த அரசை நானும் என்னவோ ஏதோ என்று நினைத்தேன் ஆனால் காமெடியாக இருக்கிறது இந்த அரசாங்கம். நேரடியாக கேட்கிறேன் என்னை மிரட்டி பார்க்கிறீர்களா? அதற்கு நான் ஆள் இல்லை அப்படி என்ன செய்வீர்கள்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
உங்களுடைய எண்ணம் தான் என்ன சார்?
Image Credit : Asianet News

உங்களுடைய எண்ணம் தான் என்ன சார்?

கொள்கையை பெயரளவில் வைத்து குடும்ப ஆட்சி நடத்தும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும். என்ன பெரிதாக நாங்கள் கேட்டு விட்டோம் மக்கள் வந்து நிம்மதியாக வந்து பார்த்து செல்வதற்கு அமைதியான ஒரு இடம்.அதை நாங்கள் தேர்வு செய்து அதற்கு நாங்கள் அனுமதி கேட்கிறோம். ஆனால் அந்த இடத்தை விட்டுவிட்டு மக்கள் எங்கு நெருக்கடியோடு நிற்பார்களோ அந்த இடமாக பார்த்து நீங்கள் தேர்வு செய்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள் உங்களுடைய எண்ணம் தான் என்ன சார்?

நான் மக்களை சந்திக்கக் கூடாது அவர்களுடன் பேசக்கூடாது, அவர்களுடைய குறைகளை கேட்கக்கூடாது, அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது, என்ன தான் சார் உங்கள் எண்ணம். சரி ஒரு அரசியல் தலைவன் என்பதை எல்லாம் மறந்து விடுங்கள் ஒரு சாதாரண ஒரு தமிழ்நாட்டு மண்ணோட ஒரு மகனாக தமிழ் மக்களுடைய சொந்தக்காரனாக, என் மக்களை என் குடும்பத்தை என் சொந்தங்களை நான் பார்க்க போனால் என்ன பண்ணுவீர்கள்… அப்போதும் தடை போடுவீர்களா.. வேண்டாம் சார் இந்த அடக்குமுறை, அராஜக எல்லாம் வேண்டாம்.

34
நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க சார்…
Image Credit : tvk

நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க சார்…

நாம் ஒன்றும் இங்கு தனியாள் கிடையாது, மாபெரும் மக்கள் சக்தி உடைய பிரதிநிதி, மாபெரும் பெண்கள் சக்தி உடைய சகோதரன், மாபெரும் இளைஞர் இயக்கமாக இருக்கிறோம் சார் மறுபடியும் சொல்றேன் 2026ல் இரண்டு பேருக்கு தான் இங்கு போட்டியே ஒன்று தவெக மற்றொன்று திமுக. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டுறதையெல்லாம் விட்டுவிட்டு தில்லா கெத்தா நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க சார்…

பாத்துக்கலாம் சார் கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை வச்சு தமிழகத்தை கொள்ளை அடிக்கும் நீங்களா? அல்லது தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்குள் ஒருத்தனாக இருக்கும் இந்த விஜய்யா? பார்த்துக்கலாம் சார்.

இனிமே இது போன்ற தடைகள் எல்லாம் போட்டீர்கள் என்றால் நான் நேரடியாக மக்களிடமே அனுமதி கேட்டுக்கொள்கிறேன் மக்களே நீங்கள் சொல்லுங்கள் நான் உங்களை பார்க்க வரக்கூடாதா? நான் உங்களிடம் பேசக்கூடாதா?? உங்களுடைய குறைகளை கேட்க கூடாதா? உங்களுக்காக நான் குரல் கொடுக்கக் கூடாதா?

இப்படி நமக்கு எல்லாம் தடையா போடுறாங்களே இந்த திமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வரணுமா? உங்க நல்லதுக்காக இருக்கும் உங்க தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைய வேண்டுமா? சத்தமா… சத்தமா… கேட்டுச்சா மை டியர்... நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல அவருக்கு ஆசையாக பாசமாக கூப்ட்டா பிடிக்கலைனு ஏன் மறுபடியும் ... கேட்டுச்சா சிஎம் சார்... இந்தப் போர் முழக்கம் ஒரு நிமிடம் கூட உங்கள தூங்க விடாது, உங்களை துரத்திக் கொண்டே வரும்…

44
வெளிநாட்டில் முதலீடா? வெளிநாட்டு முதலீடா?
Image Credit : tvk

வெளிநாட்டில் முதலீடா? வெளிநாட்டு முதலீடா?

வெளிநாட்டில் முதலீடா? வெளிநாட்டு முதலீடா? சிஎம் சார், உங்க மனசை தொட்டு சொல்லுங்கள். குடும்பத்தை வச்சிட்டு கொள்ளை அடிக்கிற உங்களுக்கே இவ்ளோ இருந்தா, சொந்தமா உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும். பூச்சாண்டி வேலையெல்லாம் விட்டுட்டு, நேர்மையா வாங்க பாக்கலாம். குடும்பத்தை வச்சு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கிற நீங்களா? இல்லை தமிழ்நாட்டில இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் ஒருத்தனா இருக்கிற நானா பார்த்துடலாம் சார். குடும்பத்தின் வளர்ச்சியையும், சுயநலனையும் பாதுகாக்கவே அரசு நினைக்கிறது. பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா நேர்மையா எலக்சனை சந்திக்க வாங்க சார்

இந்த முன்னேற்றத்திற்கு எல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி’ என அடுக்குமொழியில் பேசுவோரை கேட்டு கேட்டு, நம் காதில் இருந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம்’’ எனப்பேசினார் விஜய்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
CM சார் தெரியாம கேக்கறேன்..! Rss காரர் வந்தா கரண்ட் கட் பண்ணுவீங்களா? பேஸ்ட்மென்ட் ஆடிடும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved