- Home
- Tamil Nadu News
- எடப்பாடிக்கு திடீரென போன் போட்ட விஜய்..? பேசியது என்ன? காட்சிகள் மாறுதா? வெலவெலத்துப்போன திமுக, பாஜக!
எடப்பாடிக்கு திடீரென போன் போட்ட விஜய்..? பேசியது என்ன? காட்சிகள் மாறுதா? வெலவெலத்துப்போன திமுக, பாஜக!
Vijay Calls EPS: தவெக தலைவர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் போன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் என்ன பேசினார்கள்? தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்கிறதா? என்பது குறித்து பார்ப்போம்.

தமிழக அரசியல் களம்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதிலும், அதிமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளன. பாஜக இந்த முறை தமிழகத்தில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதேபோல் நடிகர் விஜய்யின் தவெக, 2026 தேர்தலில் ஆட்சியை பிடித்து அதிசயம் நிகழ்த்துவோம் என்று கூறி வருகிறது.
திமுகவை கடுமையாக விமர்சிக்கும் விஜய்
மதுரையில் சுமார் 2 லட்சம் பேர் கூடிய பிரம்மாண்ட மாநாடு நடத்தி முடித்த தவெக தலைவர் விஜய், இப்போது மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த வார சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் பிரசாரம் செய்த அவர், இன்று (சனிக்கிழமை) நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். விஜய் தனது பிரசாரத்தின்போது திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
எடப்பாடியிடம் போன் மூலம் பேசிய விஜய்?
குறிப்பாக இன்று திருவாரூரில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் முதல்வர் ஸ்டாலினையும், திமுகவை அரசையும் விஜய் விளாசித் தள்ளினார். இப்படியாக திமுக மீது கடும் கோபத்தில் இருக்கும் விஜய், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடிக்கு விஜய் திடீரென போன் செய்து பேசியது ஏன்? இருவரும் என்ன பேசினார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாநாட்டில் அதிமுகவை தாக்கிய விஜய்
விஜய்யை பொறுத்தவரை தவெக தொடங்கியது முதல் திமுகவைவும், பாஜகவையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். தொடக்கத்தில் அதிமுகவை அவர் சுத்தமாக விமர்சிக்கவில்லை. இதனால் விஜய் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநாட்டில் அதிமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி இன்று பாஜகவிடம் அடிமைபட்டு கிடப்பதாக மறைமுகமாக தாக்கினார்.
தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி
இதற்கிடையே அதிமுகவும், தவெகவும் கூட்டணி வைக்க போவதாக தகவல் கசிந்த நிலையில், பாசிச பாஜக மற்றும் அதனுடன் தொடர்பில் இருக்கும் எந்த கட்சியுடன் கூட்டணியில்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்பதை விஜய் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.
அதிமுக தமிழகத்தில் செல்வாக்கு இழந்து விட்டதை மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டி வருகிறார். இது மட்டுமின்றி அதிமுக பக்கம் இருக்கும் வாக்குகளை நைசாக தவெக பக்கம் சாய்க்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு விஜய் தொடர்ந்து புகழாரம் சூட்டி வருகிறார்.
இபிஎஸ்க்கு விஜய் போன் போட்டது ஏன்?
விஜய்யின் செயலால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் போன் மூலம் பேசியதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவையும், அதிமுகவையும் விமர்சிக்கும் விஜய், இபிஎஸ்க்கு எப்படி போன் செய்தார்? என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்துள்ளது.
ஆனால் அண்மையில் டெல்லியில் நடந்த சந்திப்பின்போது இபிஎஸ்ஸிடம் அமித்ஷாவிடம் கடுமை காட்டியதும், எடப்பாடி எதிரிகளான ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்கும்படி வலியுறுத்தியதாவும், அவர்களுக்கும் சேர்த்து அமித்ஷா சீட் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
திமுக, பாஜக ஷாக்
இதனால் பாஜகவின் அடக்குமுறையை விரும்பாத இபிஎஸ், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக விஜய்யுடன் பேசினாரா? என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம் விஜய்யும், இபிஎஸ்ஸும் ஒன்று சேர்ந்தால் பலமான திமுகவை எளிதாக வீழ்த்தலாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியுடன், விஜய் போனில் பேசியதாக கூறப்படும் தகவல் அறிந்து திமுகவும், பாஜகவும் வெலவெலத்துப் போய் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.