இட்லி சுட பொறந்த மாதிரியே.. ரசிகர்களிடம் வொர்க் அவுட் ஆனதா இட்லி கடை டிரெய்லர்?
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படம் ஆன ‘இட்லி கடை’ ஆக்ஷன், குடும்ப பாசம், காதல் என அனைத்தும் கலந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது.

இட்லி கடை டிரெய்லர் ரிலீஸ்
நடிகர் தனுஷ் இயக்குநராக வந்த ப.பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வெற்றிகளுக்குப் பிறகு, அவர் நான்காவது முறையாக இயக்கியும், நடிப்புமாக உருவாக்கியிருக்கும் புதிய படம் இட்லி கடை. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாகவும், நித்யா மேனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்துள்ளார்.
அக்டோபர் 1-ல் வெளியாகும் இட்லி கடை
அக்டோபர் 1ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அந்த உற்சாகத்திலேயே, படக்குழுவினர் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். டிரெய்லர் வந்ததுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இட்லி சுட பொறந்த மாதிரியே
டிரெய்லரில், தனது தந்தையின் இட்லி கடையை காப்பாற்ற உயிரையே பணயம் வைத்து போராடும் ஹீரோ தனுஷ் கதாபாத்திரம் மிகுந்த உணர்ச்சியுடன் காட்டப்பட்டுள்ளது. அதேசமயம், “இட்லி கடையை அழிக்காமல் விடமாட்டேன்” என்று வில்லனாக அருண் விஜய் வருகிறார். ஆக்ஷன், எமோஷன், குடும்ப பாசம், காதல், நகைச்சுவை என பல அம்சங்கள் கலந்த படமாக இட்லி கடை டிரெய்லரிலேயே வெளிவருகிறது.
வில்லனாக மிரட்டும் அருண் விஜய்
சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பீல் குட் படங்களுக்கு தனி ஒரு வரவேற்பு நிலவி வருகிறது. அந்த வரிசையில் இட்லி கடையும் ஒரு முழுமையான பீல் குட் படமாக ரசிகர்களிடம் சேரப்போகிறது என்பதில் ஐயமில்லை. “இப்படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.