- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவியில் அதிக வியூஸ்களை தட்டிதூக்கிய டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்
சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவியில் அதிக வியூஸ்களை தட்டிதூக்கிய டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்
சின்னத்திரையில் முன்னணி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவற்றில் போட்டிபோட்டு ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் ஐந்து இடங்களை பிடித்த சீரியல்கள் என்னவென்று பார்க்கலாம்.

Top 5 Most Watched Tamil Serials
சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களை போட்டிபோட்டு ஒளிபரப்பி வரும் சேனல்கள் என்றால் அது விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் தான். இந்த மூன்று சேனல்களிலும் காலை 11 மணி தொடங்கி இரவு 11 மணிவரை இடைவிடாது சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அதிக டிமாண்ட் உள்ளதால் வாரத்தின் 7 நாட்களும் சில சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 36வது வாரத்தில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்களின் பட்டியலை பார்க்கலாம்.
டாப் 5 சன் டிவி சீரியல்கள்
சன் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்களின் பட்டியலில் சிங்கப்பெண்ணே சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது. அந்த சீரியலுக்கு 9.73 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் 9.40 டிஆர்பி உடன் மூன்று முடிச்சு சீரியல் உள்ளது. திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் 8.92 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. நான்காம் இடத்தை சைத்ரா ரெட்டி நடித்த கயல் சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 8.77 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. ஐந்தாவது இடத்தில் கேப்ரியல்லா நடித்த மருமகள் சீரியல் உள்ளது. அதற்கு 8.24 ரேட்டிங் கிடைத்துள்ளது.
டாப் 5 விஜய் டிவி சீரியல்கள்
அதிகம் பார்க்கப்பட்ட விஜய் டிவி சீரியல்களின் பட்டியலில் முதலிடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் தான் பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 8.28 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இதையடுத்து இரண்டாவது இடத்தை அய்யனார் துணை சீரியல் பிடித்திருக்கிறது. இந்த சீரியலுக்கு 7.99 ரேட்டிங் கிடைத்துள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள சின்ன மருமகள் சீரியலுக்கு 7.35 ரேட்டிங்கும், நான்காம் இடத்தில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு 6.38 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன. ஐந்தாம் இடத்தை சிந்து பைரவி சீரியல் பிடித்துள்ளது. மகாநதி சீரியலை பின்னுக்கு தள்ளி ஐந்தாம் இடத்துக்கு வந்துள்ள இந்த சீரியலுக்கு 4.96 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
டாப் 5 ஜீ தமிழ் சீரியல்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 சீரியல்கள் பட்டியலில் ஆலியா மானசா நடிப்பில் புதிதாக தொடங்கப்பட்ட பாரிஜாதம் சீரியல் 3.76 ரேட்டிங் உடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. நான்காம் இடத்தில் உள்ள சிந்து பைரவி சீரியலுக்கு 4.96 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் உள்ள அண்ணா சீரியலுக்கு 5.05 ரேட்டிங் கிடைத்துள்ளது. அடுத்ததாக 5.08 புள்ளிகளுடன் அயலி சீரியல் இரண்டாம் இடத்தில் உள்ளது. வழக்கம்போல் முதலிடத்தில் கார்த்திகை தீபம் சீரியல் தான் உள்ளது. அந்த சீரியலுக்கு அதிகபட்சமாக 5.19 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.