இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி, முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:49 PM (IST) Oct 18
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த துக்கத்தை அனுசரிக்கும் விதமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்ற தவெக தலைவர் விஜய்யின் கோரிக்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட தொண்டர்கள்.
10:13 PM (IST) Oct 18
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தனது 500வது சர்வதேச போட்டியில் விளையாட உள்ளார். 20,000 சர்வதேச ரன்கள், 50 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என பல மைல்கற்களை அவர் நெருங்கியுள்ளார்.
09:57 PM (IST) Oct 18
இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தை கடந்து வருவோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயம் சந்திப்போம் என கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.
09:11 PM (IST) Oct 18
DCPU Chennai Recruitment மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (சென்னை) 20 காலியிடங்களை (கேஸ் ஒர்க்கர், சூப்பர்வைசர்) அறிவித்துள்ளது. தகுதி: 12வது முதல் PG வரை. சம்பளம் ₹28,000 வரை. நேர்காணல் மட்டுமே. அக்டோபர் 26, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
09:01 PM (IST) Oct 18
CWC Recruitment 2025 மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் (CWC) ஜூனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் உட்பட 22 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு. சம்பளம் ₹93,000 வரை. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: நவம்பர் 15, 2025.
08:53 PM (IST) Oct 18
ISRO Recruitment 2025 ISRO-வின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC SHAR) டெக்னீஷியன், சயின்டிஸ்ட்/இன்ஜினியர் உட்பட 141 காலியிடங்கள் அறிவிப்பு. தகுதி: 10th, ITI, Diploma, B.E/B.Tech. நவம்பர் 14, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
08:47 PM (IST) Oct 18
பண்டிகை காலத்தில் IRCTC இணையதளம் முடங்குவதால், ஆன்லைன் பேமெண்ட் செய்த பலரின் பணம் சிக்கியுள்ளது. ரீஃபண்ட் தாமதமானால் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
08:44 PM (IST) Oct 18
உலகின் கொடிய நோய்களில் ஒன்றான புற்று நோயில் இருந்து தான் விடுபட்டது மட்டுமல்லாமல் பிறரும் புற்றுநோயில் இருந்து எளிதில் விடுபடும் வகையில் பத்திரிகையாளர் ஒருவர் பிரத்யேக வலைதளம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
08:15 PM (IST) Oct 18
காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ள நடிகர் ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
07:54 PM (IST) Oct 18
இந்தியாவில் தங்கத்தின் விலை விண்ணை முட்டுகிறது. சில நாடுகளில் குறைந்த இறக்குமதி வரி, ஜிஎஸ்டி இல்லாமை போன்ற காரணங்களால் இந்த நாடுகளில் தங்கம் வாங்குவது லாபகரமாக அமைகிறது.
07:30 PM (IST) Oct 18
TTV Dhinakaran, TVK Vijay | 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
07:22 PM (IST) Oct 18
Spy Balloons மாநிலங்கள் மீது உயரத்தில் மிதக்கும் மர்ம வெள்ளை பலூன்கள் மீண்டும் உளவு பயத்தை தூண்டியுள்ளது. சில இராணுவ விமானங்கள் என அடையாளம் காணப்பட்டாலும், வெளிப்படைத்தன்மை கேள்விகள் எழுகின்றன.
07:12 PM (IST) Oct 18
Animated Stickers தீபாவளி, தன்தேரஸ் வாழ்த்துக்களை அனுப்ப WhatsApp புதிய அனிமேஷன் ஸ்டிக்கர் பேக்கை வெளியிட்டுள்ளது. விளக்குகள், வாணவேடிக்கை, ரங்கோலி ஸ்டிக்கர்களை மொபைல்/வெப்பிலிருந்து டவுன்லோட் செய்வது எப்படி?
06:49 PM (IST) Oct 18
Diwali Sale Offer அமேசானில் தீபாவளி விற்பனை நீட்டிப்பு! Samsung, Xiaomi, TCL பிராண்டுகளின் LED Smart TV-கள் ₹6,000-க்கும் குறைவான ஆரம்ப விலையில் கிடைக்கின்றன. சிறந்த சலுகைகளைப் உடனே பெறுங்கள்!
06:37 PM (IST) Oct 18
Google One Plan Google-இன் அதிரடி தீபாவளி ஆஃபர்! Google One-ன் 2TB வரையிலான ஸ்டோரேஜ் திட்டத்தை முதல் 3 மாதங்களுக்கு மாதம் ₹11-க்கே பெறலாம். ஆஃபர் அக்டோபர் 31 உடன் முடிவடைகிறது!
06:22 PM (IST) Oct 18
Redmi 15 7000mAh மெகா பேட்டரி கொண்ட Redmi 15 5G போனை அமேசான் தீபாவளி தமாக்கா விற்பனையில் தள்ளுபடி விலையில் பெறுங்கள். 50MP கேமரா, சக்திவாய்ந்த Snapdragon பிராசஸர், மாதம் ₹679ல் EMI வசதியும் உண்டு!
06:07 PM (IST) Oct 18
ஹூண்டாய் கிரெட்டா 10.25-இன்ச் டச்ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது. சிறந்த மைலேஜ் மற்றும் அம்சங்களால், இது பட்ஜெட் எஸ்யூவி பிரிவில் ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது.
05:49 PM (IST) Oct 18
கரூர் தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 நபர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சத்தினை கட்சியின் தலைவர் விஜய் எந்தவித விளம்பரமும் இன்றி வழங்கினார்.
05:44 PM (IST) Oct 18
சாம்சங் நிறுவனம் தனது பல மொபைல் மாடல்களுக்கான மென்பொருள் ஆதரவை நிறுத்துகிறது. இதனால், இந்த போன்களுக்கு இனி பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்காது. சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரிக்கும்.
05:19 PM (IST) Oct 18
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது 125cc ரைடர் பைக்கின் புதிய "தி விக்கெட் ட்ரோய்கா" பதிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வடிவமைப்பு மற்றும் SmartXonnect வசதிகளுடன், இந்த பைக் இளம் ரைடர்களைக் கவரும் வகையில் உள்ளது.
04:51 PM (IST) Oct 18
A Rasa | தறுதலைத் தலைவர்கள் முன்னெடுக்கும் தவறான தத்துவத்தால் தற்போதைய இளம் தமிழ் சமூகம் எங்கே போய் நிற்கும் என்று திமுக எம்பி ஆ.ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.
04:50 PM (IST) Oct 18
தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள டியூட் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார், பால்வளத்துறை அமைச்சர் அதியமான் அழகப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளார்.
04:13 PM (IST) Oct 18
Tamilnadu Rain: அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
04:12 PM (IST) Oct 18
தாந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு, போன்பே ஆப்பில் ரூ.2,000 அல்லது அதற்கு மேல் 24K டிஜிட்டல் தங்கம் வாங்கும் பயனர்களுக்கு 2% வரை கேஷ்பேக் வழங்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
04:04 PM (IST) Oct 18
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் கம்மியான வாக்குகளை வாங்கிருந்த பலூன் அக்கா அரோரா ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆனதால், அவருக்கு பதில் யாரும் எதிர்பாராத போட்டியாளர் எலிமினேட் ஆகி உள்ளார்.
03:22 PM (IST) Oct 18
வாங்கிய கடன் ரூ.1.31 லட்சம் கோடி, மூலதனச் செலவு ரூ. 40,500 கோடி மட்டுமே: திமுக அரசின் செயலின்மையை கண்டித்த சி.ஏ.ஜி அறிக்கையை சுட்டிக்காட்டிய பாமக தலைவர் அன்புமணி திமுக.வுக்கு மக்களும் விரைவில் பாடம் புகட்டுவர் என்று தெரிவித்துள்ளார்.
03:02 PM (IST) Oct 18
தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் ஹிட் கொடுப்பதே அபூர்வமாக இருக்கும் சூழலில், முன்பு ஒரே ஆண்டில் அதிகப்படியான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தமிழ் சினிமா கொடுத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
02:56 PM (IST) Oct 18
பெங்களூருவில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், சக மாணவரான 22 வயது இளைஞரால் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். படிப்பு சம்பந்தமான மெட்டீரியல்களைத் தருவதாகக் கூறி இளைஞர் மாணவியை ஆண்கள் கழிவறைக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
02:51 PM (IST) Oct 18
மிகப்பெரிய சவாலோ, நெருக்கடியோ வரும் நேரத்தில் கட்சி தலைமை இவ்வளவு பெரிய மௌனம் சாதிப்பது சரியா? என கேள்விக்கு எழுப்ப ஆரம்பித்து இருக்கும் விஜய் ரசிகர்கள் அவர்களது கோபத்தை விஜய்க்கு அடுத்து இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த் மீது திருப்பி இருக்கிறார்கள்
02:26 PM (IST) Oct 18
சென்னை மெட்ரோவில் பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ரயில்கள் 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
02:19 PM (IST) Oct 18
தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முதல்வர் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூற மறுப்பதையும், சட்டமன்றத்தில் இதுபற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததையும் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவின் இந்த செயல் பாசிசத்தின் மொத்த உருவம்.
02:15 PM (IST) Oct 18
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
01:58 PM (IST) Oct 18
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தவெக சார்பில் யாரும் தீபாவளி கொண்டாட வேண்டாம் என தவெக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி இருகிறார்.
01:57 PM (IST) Oct 18
ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியை,. அந்த அணியின் உரிமையாளரான டியாஜியோ குழுமம் அதனை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த அணியை வாங்க 6 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன.
01:32 PM (IST) Oct 18
சாதியின் காரணமாக அடக்குமுறைக்கு ஆளான சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் கிட்டான் வாழ்க்கையைக் கூறுகிறது. நாயகன் கிட்டான் கபடி வீரராக வலம் வந்து சாதி தடைகள், குடும்ப எதிர்ப்பு, ஊர் கலவரங்களைத் தாண்டி தேசிய அளவில் வெற்றிபெற முயல்கிறான்.
01:12 PM (IST) Oct 18
ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு பின்னர் சரிவை சந்தித்த லோகேஷ் கனகராஜ், தற்போது டோலிவுட் ஹீரோ ஒருவருக்கு கதை சொல்லி ஓகே பண்ணி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
01:00 PM (IST) Oct 18
நாம் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்று நாம் பேசுகிறோம், எங்க செய்கிறோம்? கட்சிக்குள் குறை சொல்ல வேண்டிய நோக்கம் எனக்கு இல்லை, அதற்கு அவசியமுமில்லை. ஆனால் தவறை கண்டிப்பாக சுட்டிக் காட்ட வேண்டும். வேறு யார் சுட்டி காட்டுவது?
01:00 PM (IST) Oct 18
தெலுங்கானாவில், மந்திரவாதி ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்த மானசி என்ற பெண், தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் ராமுலுவை காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் அதனை விபத்து போல சித்தரிக்க முயன்றனர்.
12:47 PM (IST) Oct 18
மின்னல் தாக்கி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இழப்பீட்டை ரூ.25 லட்சமாக உயர்த்தி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
12:46 PM (IST) Oct 18
2025 அக்டோபர் மாதம் நிகழும் குரு பெயர்ச்சி, கன்னி ராசியினருக்கு 11ஆம் வீட்டில் அமர்வதால் நிதி, தொழில், மற்றும் திருமண வாழ்வில் பெரும் முன்னேற்றங்களைத் தரும். குருவின் சாதகமான பார்வை உங்கள் முயற்சிகளுக்கு வெற்றியை அளிக்கும்.