கூலிக்கு பின் கோலிவுட்டில் கம்மியான மவுசு... டோலிவுட் பக்கம் ஜூட் விட்ட லோகேஷ் கனகராஜ்..!
ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு பின்னர் சரிவை சந்தித்த லோகேஷ் கனகராஜ், தற்போது டோலிவுட் ஹீரோ ஒருவருக்கு கதை சொல்லி ஓகே பண்ணி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Lokesh Kanagaraj Next Movie
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்தடுத்த படங்களில், கார்த்தி, விஜய், கமல், ரஜினி என டாப் ஹீரோக்களை டைரக்ட் செய்து உச்சம் தொட்டார். கடைசியாக ரஜினி நடித்த கூலி படத்தை இயக்கி இருந்தார் லோகி. இப்படம் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, கடும் விமர்சனங்களை சந்தித்தது. கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது.
லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்
கூலி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த கைதி 2 திரைப்படம் தள்ளிப்போனது. அதேபோல் அவர் ரஜினி - கமல் இணையும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அந்த பட வாய்ப்பும் கைநழுவிப்போனது. இப்படி கூலியால் கோலிவுட்டில் லோகேஷுக்கு மவுசு குறையத் தொடங்கியதால், அவர் சுதாரித்துக் கொண்டு, டோலிவுட் பக்கம் ஜூட் விட்டிருக்கிறார். அதன்படி அவர் அடுத்ததாக பவர் ஸ்டார் பவன் கல்யாணை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பவன் கல்யாண் உடன் கூட்டணி
பவன் கல்யாண் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைந்தால், அதன் தாக்கம் 'ஓஜி' படத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பவர் ஸ்டார் பவன் கல்யாண் சமீபத்தில் 'ஓஜி' மூலம் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். தற்போது ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிக்கப்போவது யார்?
பவன் கல்யாண், கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் என்.கே. லோஹித் பலமுறை பவன் கல்யாணை சந்தித்துள்ளார். அதனால் அந்நிறுவனம் தான் லோகேஷ் கனகராஜ் - பவன் கல்யாண் இணையும் படத்தை தயாரிக்க வாய்ப்பு உள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது யாஷின் 'டாக்ஸிக்', விஜய்யின் ஜன நாயகன் மற்றும் சிரஞ்சீவியின் 'மெகா 158' போன்ற பெரிய படங்களைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.