MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுகவில் 90 சதவீத இந்துக்கள் இருக்கறாங்க சொல்றீங்க! ஒரு இந்து பண்டிகைக்கு கூட வாழ்த்து கூற மாட்றீங்க முதல்வரே! விடாமல் அடிக்கும் வானதி

திமுகவில் 90 சதவீத இந்துக்கள் இருக்கறாங்க சொல்றீங்க! ஒரு இந்து பண்டிகைக்கு கூட வாழ்த்து கூற மாட்றீங்க முதல்வரே! விடாமல் அடிக்கும் வானதி

தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முதல்வர் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூற மறுப்பதையும், சட்டமன்றத்தில் இதுபற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததையும் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவின் இந்த செயல் பாசிசத்தின் மொத்த உருவம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 18 2025, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தீபாவளிக்கு வாழ்த்து
Image Credit : our own

தீபாவளிக்கு வாழ்த்து

இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுத்தவர்கள், இப்போது தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாடு முதலமைச்சர் என்பவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை நாத்திகர் என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. ஆனால், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு ஆண்டுதோறும் தவறாமல் வாழ்த்து கூறுகிறார். திமுகவின் 'மதச்சார்பின்மை' என்பதும், திமுகவின் 'நாத்திகம்' என்பதும் 'இந்து மத வெறுப்பு' என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் முதலமைச்சர் நிரூபித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வானதி சீனிவாசன்
Image Credit : our own

வானதி சீனிவாசன்

கடந்த 2021இல் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் தீபாவளி, தைப்பூசம் போன்ற இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். ஆனால், 'திமுகவில் 90 சதவீத இந்துக்கள் இருக்கிறார்கள்' என்று கூறும் முதலமைச்சர், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூற விடாப்பிடியாக மறுத்து வருகிறார்.

34
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Image Credit : Asianet News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று துணை நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் பேசும்போது, "எதிர்க்கட்சியான பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன். நன்றி தெரிவிக்கிறேன். அதே பெருந்தன்மையோடு தீபாவளி பண்டிகைக்கும் வாழ்த்து கூற வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தேன். உடனே, பதறிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், "அதெல்லாம் இங்கே பேசக் கூடாது. மதம் பற்றி இங்கே விவாதம் நடைபெறவில்லை. நிதி பற்றி மட்டுமே பேச வேண்டும்" எனக்கூறி நான் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார்.

44
பாசிசம் ஏதும் இருக்க முடியாது
Image Credit : Google

பாசிசம் ஏதும் இருக்க முடியாது

ஆனால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா பேசும்போது, இஸ்ரேல் காசா பிரச்னை பற்றி நீண்டநேரம் உரையாற்றினார். அதையெல்லாம் அனுமதித்த சபாநாயகர், தீபாவளி என்று சொன்னதும் ஏன் பதறினார் என்பது புரியவில்லை. இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுத்தவர்கள், இப்போது, "தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், உலகெங்கும் வாழும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுங்கள் என்று பேசியதைக் கூட நீக்குகிறார்கள். இதைவிட பாசிசம் ஏதும் இருக்க முடியாது. இப்படி பாசிசத்தின் மொத்த உருவகமான திமுகவினர், ஜனநாயகம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
வானதி சீனிவாசன்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
பிஜேபி
தீபாவளி பண்டிகை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Related Stories
Recommended image1
இந்து மதத்தை அவதித்த உதயநிதி! மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு இப்படி வாழ்த்து கூற தில்லு இருக்கா! இறங்கி அடிக்கும் பாஜக!
Recommended image2
சென்னையை தும்சம் செய்யப்போகுதாம் மழை! டெல்டா, தென் மாவட்டங்களுக்கு வெதர்மேன் கொடுத்த வார்னிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved