- Home
- Cinema
- இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில் புது ட்விஸ்ட்... ED அதிகாரிகளுக்கு செக் வைத்த ஐகோர்ட்
இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில் புது ட்விஸ்ட்... ED அதிகாரிகளுக்கு செக் வைத்த ஐகோர்ட்
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Akash Baskaran Case Against ED Officials
தனுஷின் இட்லி கடை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆகாஷ் பாஸ்கரன். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான இவர் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக நடத்தப்பட்ட அந்த ரெய்டில், ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இதன்பின்னர் இதை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அப்போது ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆகாஷ் பாஸ்கரன் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடைவிதித்து இருந்தது. இதனிடையே ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
நீதிமன்றமே நடவடிக்கைக்கு தடைவிதித்த பின்னர் அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியதால், அவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையத் தலைவர் மற்றும் பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.