IRCTC-யில் பணம் சிக்கியிருச்சா.? கவலை வேண்டாம்.. ரீஃபண்ட் இப்படி வரும்!
பண்டிகை காலத்தில் IRCTC இணையதளம் முடங்குவதால், ஆன்லைன் பேமெண்ட் செய்த பலரின் பணம் சிக்கியுள்ளது. ரீஃபண்ட் தாமதமானால் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

ஐஆர்சிடிசி ரீஃபண்ட்
பண்டிகை காலத்தில் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் முடங்கியதால், ஆன்லைன் பேமெண்ட் செய்த பல பயணிகள் பாதிக்கப்பட்டனர். பணம் சிக்கியதால் சமூக ஊடகங்களில் புகார்கள் குவிந்தன. பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதால், சர்வரில் அழுத்தம் அதிகரித்து இணையதளம் முடங்குகிறது. 5,000க்கும் மேற்பட்டோர் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
ஐஆர்சிடிசி பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறை,
டிக்கெட் முன்பதிவின் போது பணம் செலுத்தப்பட்டு, டிக்கெட் வராவிட்டால் கவலை வேண்டாம். IRCTC-யின் ரீஃபண்ட் செயல்முறை தானாகவே செயல்படும். உங்கள் பணம் பாதுகாப்பானது.
தானியங்கி ரீஃபண்ட்: பேமெண்ட் தோல்வியடைந்த 3-5 வேலை நாட்களில் பணம் உங்கள் கணக்கிற்குத் திரும்ப வரும்.
அதிகபட்ச காலம்: தொழில்நுட்ப காரணங்களால் ரீஃபண்ட் வர 21 நாட்கள் வரை ஆகலாம்.
ஐஆர்சிடிசி கட்டணம்
ரீஃபண்ட் வரவில்லை என்றால், பரிவர்த்தனை தோல்வி ஸ்கிரீன்ஷாட்டை care@irctc.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு புகார் அளியுங்கள்.
இந்தியன் ரயில்வே
பண்டிகை காலங்களில் IRCTC-யில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அதன் ரீஃபண்ட் அமைப்பு பாதுகாப்பானது மற்றும் தானியங்கியானது. உங்கள் பணம் நிச்சயம் திரும்பக் கிடைக்கும்.