- Home
- Tamil Nadu News
- தீபாவளிக்கு சென்னையில் இருந்து கடைசி நேர சிறப்பு ரயில்.! தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
தீபாவளிக்கு சென்னையில் இருந்து கடைசி நேர சிறப்பு ரயில்.! தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை எக்மோர் - சான்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், நெல்லை மற்றும் மதுரைக்கு முன்பதிவில்லா மெமு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த இரு தினங்களாக பல லட்சம் பேர் வெளியூர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
மேலும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்து விட்டதால் புதிய ரயில் இயக்கப்படுமா என காத்திருந்தனர். அந்த வகையில் நெல்லை, மதுரைக்கு முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கப்படுகிறது. இதனால் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது.
சான்த்ராகாச்சி சிறப்பு ரயில்
இந்த நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எக்மோர் – சான்த்ராகாச்சி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. ரயில் எண்கள்: 06109 சென்னை எக்மோர் – சான்த்ராகாச்சி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், 06110 சான்த்ராகாச்சி – சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில் எண் 06109: சென்னை எக்மோரிலிருந்து அக்டோபர் 19, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 00.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.00 மணிக்கு சான்த்ராகாச்சியை அடையும். மறு வழிதடத்தில் ரயில் எண் 06110: சான்த்ராகாச்சியிலிருந்து அக்டோபர் 20, 2025 (திங்கட்கிழமை) பிற்பகல் 14.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 21.00 மணிக்கு சென்னை எக்மோரைக் கடையும்.
சிறப்பு ரயில் - வழித்தடம் என்ன.?
இந்த சிறப்பு ரயிலில் 10 – ஸ்லீப்பர் வகுப்பு வண்டிகள், 8 – இரண்டாம் வகுப்பு பொதுவண்டிகள் 2 – மாற்றுத் திறனாளிகள் பயணிக்க ஏதுவான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் சென்னை எக்மோர், சுள்ளுருபேட்டை, கூடூர், நெல்லூர், ஒங்கோல், தெனாலி, விஜயவாடா, ஏலூர், ராஜமுந்திரி, சமல்கோட், துவ்வாடா, விஜயநகரம், ஸ்ரிகாகுளம் ரோடு, பாலாசா, குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டக், பாத்ரக், பாலசோர், காரக்பூர், சான்த்ராகாச்சி ஆகிய நிலையங்களில் ரயில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடக்கம்
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 18, 2025 (இன்று) காலை 08.00 மணி முதல் தென் ரயில்வே இணையதளம் மற்றும் முன்பதிவு நிலையங்களில் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.