- Home
- Tamil Nadu News
- ஒரு வாரத்திற்கு விடாமல் இடி, மின்னலுடன் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஒரு வாரத்திற்கு விடாமல் இடி, மின்னலுடன் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Weather Update: வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு நிலையில் வெயில் இருந்தாலும் ஒருசில இடங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கரூர், மதுரை மாவட்டங்களில் நேற்று 101 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் படிப்படியாக குறைந்து இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வடக்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மார்ச் 18ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 19 டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் மாரச் 20 கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 21 தென் தமிழகம் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும். வடக்கு உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 22 தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

