CWC Recruitment 2025 மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் (CWC) ஜூனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் உட்பட 22 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு. சம்பளம் ₹93,000 வரை. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: நவம்பர் 15, 2025.
மத்திய அரசின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் (Central Warehousing Corporation - CWC), காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு வேலையாகும். இந்தியா முழுவதும் பணிபுரியும் வகையில், மொத்தம் 22 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவிகள் மற்றும் சம்பள விவரம்:
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் இரண்டு முக்கிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
1. பதவி: Junior Personal Assistant
o காலியிடங்கள்: 16
o சம்பளம்: மாதம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை.
o கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (Graduate) பெற்றிருப்பதோடு, ஒரு வருட கால அலுவலக மேலாண்மை மற்றும் செயலர் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலச் சுருக்கெழுத்தில் (Shorthand) மணிக்கு 80 வார்த்தைகள் மற்றும் ஆங்கிலத் தட்டச்சில் மணிக்கு 40 வார்த்தைகள் வேகம் அவசியம்.
2. பதவி: Junior Executive (Rajbhasha)
o காலியிடங்கள்: 06
o சம்பளம்: மாதம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை.
o கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தியை ஒரு விருப்பப் பாடமாகவும், ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாகவும் கொண்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு, தளர்வு மற்றும் கட்டணம்:
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
• வயது தளர்வு: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் PWD பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.
• விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் (UR/EWS) மற்றும் OBC பிரிவினர் ரூ.1,350/- செலுத்த வேண்டும். SC, ST, PwBD, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் ரூ.500/- செலுத்தினால் போதுமானது.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள்:
விண்ணப்ப செயல்முறை மற்றும் தேர்வு முறை குறித்த முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யும் முறை:
1. ஆன்லைன் தேர்வு (Online Exam)
2. திறன் தேர்வு (Typing & Stenography Skill Test)
3. சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
முக்கிய தேதிகள்:
o விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.10.2025
o விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2025
விண்ணப்பதாரர்கள் www.cwceportal.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
