- Home
- Auto
- அடேங்கப்பா..! Boost Mode + Dual Disc Brakes – நகர சவாரிக்கு டிவிஎஸ் ரைடர் 125 வந்தாச்சு.. விலை எவ்வளவு?
அடேங்கப்பா..! Boost Mode + Dual Disc Brakes – நகர சவாரிக்கு டிவிஎஸ் ரைடர் 125 வந்தாச்சு.. விலை எவ்வளவு?
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது 125cc ரைடர் பைக்கின் புதிய "தி விக்கெட் ட்ரோய்கா" பதிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வடிவமைப்பு மற்றும் SmartXonnect வசதிகளுடன், இந்த பைக் இளம் ரைடர்களைக் கவரும் வகையில் உள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான 125cc டிவிஎஸ் Raider மோட்டார்சைக்கிளின் புதிய, முன்னேற்றமான பதிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது இதன் பெயர் “The Wicked Troika”. புதிய Raider திறனோடு, தொழில்நுட்பத்தோடு, பாதுகாப்போடு ஒரு புதிய அவதாரத்தில் வருகிறது. டிவிஎஸ் யங்க் ரைடர்களின் மனநிலை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப புதிய வடிவமைப்பில் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய தொழில்நுட்பம்
புதிய மோட்டார் சைக்கிளில் iGO Assist தொழில்நுட்பத்தால் இயங்கும் பூஸ்ட் பயன்முறை வழங்கப்பட்டுள்ளது. இது 11.75Nm டார்க் மற்றும் 11.38bhp பவர் 6,000rpm-ல் தருகிறது. கூடுதலாக, டூயல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் வசதியுடன் வருகிறது. இது 125cc கிளாஸில் முதல் முறையாக இணைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சமாகும். இது பயணிக்கும் போது முழுமையான கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கையை வழங்குகிறது.
ரைடர் 125 புதிய அம்சங்கள்
டிவிஎஸ் ரைடர் புதிய Glide through Technology (GTT)-ஐ கொண்டுள்ளது. இது நகர பயணத்தின் போது அதிக வேகத்தை குறைந்த நேரத்தில் அடைய உதவுகிறது. மோட்டார் சைக்கிள் முன்புறம் 90/90-17 மற்றும் பின்புறம் 110/80-17 பரப்பான டயர்களுடன் வருகிறது, இது சிறந்த கிரிப் மற்றும் ஸ்டேபிலிட்டியைக் கொடுக்கிறது. பிரமாண்டமான மெட்டாலிக் சில்வர் பிண்ணியம் மற்றும் லால்ஆலாய் வீல் வடிவமைப்பு ரைடருக்கு ஸ்போர்ட்டி லுக் கொடுக்கிறது.
டிவிஎஸ் ரைடர் 125
மேலும், SmartXonnect வசதி மூலம் இரண்டு டிஸ்ப்ளே விருப்பங்களுடன் வருகிறது. TFT ஸ்க்ரீனில் 99+ அம்சங்கள், மற்ற LCD கிளஸ்டரில் 85+ அம்சங்கள் உள்ளன. புளூடூத், வாய் அசிஸ்ட், டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், கால் ஹேண்ட்லிங், நோட்டிபிகேஷன்கள் போன்ற வசதிகள் பயணத்தை இணைக்கப்பட்ட பயணமாக மாற்றுகிறது. கூடுதலாக, Follow Me Headlamp வசதி இருட்டான இடங்களில் பயணிக்கும்போது விளக்கை சில நொடிகளுக்கு ஆன் நிலையில் வைத்திருக்கும். புதிய டிவிஎஸ் Raider TFT dual disc வேரியன்ட் ரூ. 95,600 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மற்றும் SXC டூயல் டிஸ்க் ரூ. 93,800 விலையில் கிடைக்கிறது. இப்போது டிவிஎஸ் மோட்டார் டீலர் ஷோரூம்களில் வாங்கலாம்.