- Home
- Politics
- ஸ்டாலினையே மிரட்டும் முரட்டு உ.பி..! கட்சியின் ஆணிவேரையே அறுக்கப்பார்க்கிறீர்களா..? கடும் குற்றச்சாட்டு..!
ஸ்டாலினையே மிரட்டும் முரட்டு உ.பி..! கட்சியின் ஆணிவேரையே அறுக்கப்பார்க்கிறீர்களா..? கடும் குற்றச்சாட்டு..!
நாம் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்று நாம் பேசுகிறோம், எங்க செய்கிறோம்? கட்சிக்குள் குறை சொல்ல வேண்டிய நோக்கம் எனக்கு இல்லை, அதற்கு அவசியமுமில்லை. ஆனால் தவறை கண்டிப்பாக சுட்டிக் காட்ட வேண்டும். வேறு யார் சுட்டி காட்டுவது?

திமுக தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியாக, ஆளும் கட்சியாக இருந்தாலும், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சியின் தொண்டர்கள் இடையே தலைமை மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. மாற்றுக் கட்சியில் இருந்து புதிதாக இணைந்தவர்களுக்கு வாய்ப்பு, கட்சியின் அடிப்படையே தெரியாதவர்களை முன்னிலைப்படுத்துவது, பாரம்பரிய தொண்டனை கண்டுகொள்ளாமல் இருப்பது என கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்தப்போக்கு சமீபக காலமாக பெரும் அதிருப்தியாக வெடித்துக் கிளம்பியுள்ளது.
அதற்கு மிகப்பெரிய ஆதாரமாக திமுக தொண்டர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த தொண்டர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘தலைவர் ஸ்டாலினிடம் நான் வேண்டிக் கொள்வது, நமது கழகத்தில் லட்சக்கணக்கான கிளைச்செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இது நமது கழகத்தின் அடிப்படை. சாதாரண தொண்டர்கள்தான் திமுகவின் முதுகெலும்பு, கழகத்தின் ஆணிவேர். அவர்கள் நல்லா இருக்கிறார்களா என்று பார்த்தீர்களா? அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? அதை முதலில் பாருங்கள் தலைவரே.
வேறு யாரிடமும் பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். நீங்கள் செய்யுங்கள் என்று ஒப்படைக்காதீர்கள். நீங்கள் செய்யுங்கள் என்று சொன்னால் அவர்கள் எங்களுக்கு என்ன செய்தார்கள்? இந்த லட்சக்கணக்கான கிளைச் செயலாளர்களுக்கும், வார்டு செயலாளர்களுக்கும் என்ன செய்தார்கள்? அந்த கிளைக் கழகத்தில், ஒன்றிய கழகத்தில் யார் யார் நிர்வாகிகள் இருக்கிறார்கள்? எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா? இங்கு இருக்கக்கூடிய நிர்வாகிகள் சேலத்தில் போய் சேருகிறார்கள். ஓமலூரில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போய் சேர்கிறார்கள். எப்படி சேர்கிறார்கள்? பல இடங்களில் அவர்களைக் கவனிக்கவே இல்லை.
ஒரு மாவட்ட நிர்வாகத்தில் இருக்கும் ஒன்றிய செயலாளருக்கு இன்னைக்கு நைட்டு சாயங்காலம் பொதுக்கூட்டத்தை வைத்துக் கொண்டு முதல் இரவு தான் நோட்டீசை அனுப்புகிறார்கள். அதில் அவர்கள் பெயரையும் போடுவதில்லை. பல இடங்களில் மாவட்ட நிர்வாகிகள் பெயரையாவது போடுவார்கள் என்று பார்த்தால் அதுவும் போடுவதில்லை. இன்னும் பல பிரச்சினைகள் இருக்கிறது. நமது எதிரியை வீழ்த்த வேண்டும் என்றால் நாம் ஒன்று பட வேண்டும் அல்லவா? அந்த ஒன்றுபடுவதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? இன்னும் பல பேர் வேதனையில் தான் இருக்கிறான்.
முதுகுளத்தூர் பக்கத்தில் 40 வருடமாக திமுகவில் இருந்தவர். இயக்கத்திற்காக உழைத்தவர். திமுககாரனை தவிர நான் வேறு எவனுக்கும் டீ கொடுக்க மாட்டேன் என்று வெறி பிடித்த கட்சி தொண்டன். ஒரு வாரத்திற்கு முன்னால் உடம்பு சரியில்லை என்று படுத்த படுக்கையாக கிடக்கிறான். அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருத்தர் கூட அவரைப் போய் பார்க்கவில்லை. நேற்று இறந்து போய்விட்டார். அதற்குக்கூட எவனும் வரவில்லை. என்ன அரசியல் நடத்துகிறோம்? நாம் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்று நாம் பேசுகிறோம், எங்க செய்கிறோம்? கட்சிக்குள் குறை சொல்ல வேண்டிய நோக்கம் எனக்கு இல்லை, அதற்கு அவசியமுமில்லை. ஆனால் தவறை கண்டிப்பாக சுட்டிக் காட்ட வேண்டும். வேறு யார் சுட்டி காட்டுவது?
பேச்சாளர் பட்டியல் வந்திருக்கிறது. அதில் எத்தனை பேர் கொள்கை பரப்பு செயலாளர் என்று இருக்கிறார்கள்? அதில் யாராவது பெயர் இருக்கிறதா? பத்மபிரியாவும், டான் அசோக்கும்தான் இந்த இயக்கத்திற்கு உழைத்தவர்களா? அவர்கள்தான் திமுகவை பற்றி பேசுவார்களா? மனுஷிய புத்திரனுக்கு திமுகவை பற்றி என்ன பேச தெரியும்? என்ன அரசியலில் பெரிதாக பேசி விடுவார்? இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட 20, 30 முறை வழக்கு பாய்ந்து சென்று இன்னும் படிக்கட்டில் ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பல பேர் பேச தெரியாமல் இருக்கலாம். ஆனால், பேசத் தெரிந்த, கழக வரலாறு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஒரு மீட்டிங்கில் மனப்பாடம் செய்து பேசுபவன் இல்லை அரசியல்வாதி, மேடைப்பேச்சாளன்.
ஒரு மேடையில் தலைவர் கலைஞர் பேசுகிறார் என்றால் அந்த மேடையில் உட்கார்ந்து கொண்டு 10 பேர் பேசுகிறார்கள் என்றால் அந்த பத்து பேர் என்ன பேசுகிறார்கள் என்பதை உள்வாங்கி அந்த 10 பேருக்கு பதில் சொல்ல வேண்டும். கடந்த கால அரசியலையும் பேச வேண்டும். நடப்பு அரசியல், எதிர்கால அரசியலைப் பேச வேண்டும். அதை எல்லாம் இணைத்து பேசக்கூடிய அந்த தலைவர் கலைஞர் போல நமது கட்சியில் இருக்கும்போது, பத்மபிரியா போன்ற ஆட்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுக்குறீர்கள்? இந்த பத்ம ப்ரியாவையோ, டான் அசோக்கையோ நான் குறை சொல்லவில்லை. திமுக கொள்கைகளை பேசக்கூடிய கொள்கை பரப்புச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு நாள் ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் என்றால் இரண்டாவது நாளும் அதே ஆள்களுக்கு கொடுக்காமல் வேறு ஆட்களுக்கு கொடுத்திருக்கலாமே.
கட்சிக்குள் பெரிய விவகாரம் இருக்கத்தான் செய்கிறது. அதோடு சேர்ந்து இந்த பேச்சாளர்கள் பட்டியலை யார் எடுத்தார்கள் என்றும் தெரிய வேண்டும். நிறைய பேச்சாளர்கள் வருத்தப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். ஏன் அந்த சூழலை உருவாக்க வேண்டும்? திமுகவில் திட்டமிடல் எப்போதுமே பிரச்சினையாக இருக்காது. ஆனால் இப்போது இருக்கிறது’’ என வேதனைப்பட்டுள்ளார் அந்த கழகத் தொண்டர்.