- Home
- Politics
- 30 ஃபார்ச்சூனர் கார்கள்..! வண்டி வண்டியாய் குவியும் புகார்கள்..! புஸ்ஸி ஆனந்த் பதவியை பறிக்கப் போகிறாரா விஜய்?
30 ஃபார்ச்சூனர் கார்கள்..! வண்டி வண்டியாய் குவியும் புகார்கள்..! புஸ்ஸி ஆனந்த் பதவியை பறிக்கப் போகிறாரா விஜய்?
மிகப்பெரிய சவாலோ, நெருக்கடியோ வரும் நேரத்தில் கட்சி தலைமை இவ்வளவு பெரிய மௌனம் சாதிப்பது சரியா? என கேள்விக்கு எழுப்ப ஆரம்பித்து இருக்கும் விஜய் ரசிகர்கள் அவர்களது கோபத்தை விஜய்க்கு அடுத்து இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த் மீது திருப்பி இருக்கிறார்கள்

த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அதிருப்தி, விமர்சனங்கள், வெறுப்பு உணர்வுகள்தொடக்கத்திலிருந்து தீவிரமடைந்து வந்தது. குறிப்பாக கரூர் சம்பவத்துக்குப் பிறகு உச்சத்தை அடைந்துள்ளது. இந்தப் பிரச்சினை பதவி நியமனங்கள், மோதல்களைச் சுற்றி சுழன்று வருகிறது. விஜயின் ரசிகராகவும், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். 2024ல் த.வெ.க கட்சி தொடங்கப்பட்டபோது பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் புஸ்ஸி ஆனந்த்.
கட்சியின் அன்றாட நிர்வாகம், பதவி நியமனங்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதுக் கொண்டார். 2025 ஜனவரி முதல், கட்சியில் மாவட்ட, இலக்கிய நிர்வாகிகள் நியமனங்களின்போது "சாதி, பணம் பார்த்து பதவி வழங்குவதாக" குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. த.வெ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் புஸ்ஸி ஆனந்த் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
பதவிகளை சாதி அடிப்படையில் குறிப்பாக தனது சாதியினருக்கு வழங்குவதாகவும், ரூ.15 லட்சம் வரை பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. "எங்களை நாய் மாதிரி நடத்துகிறார்" என நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆரணி மாவட்ட செயலாளர் நியமனத்தில் ஜாதி பார்ப்பதாக பெண் நிர்வாகி வீடியோ வெளியிட்டார். தனக்கு இணக்கமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுப்பது, எதிர்ப்பாளர்களை புறக்கணிப்பது என அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப்பிறகு புஸ்ஸி ஆனந்த் மீதான எதிர்ப்பு இன்னும் வலுவடைய தொடங்கி இருக்கிறது.
தவெக தொண்டர்கள் புஸ்ஸி ஆனந்தை அந்தப்பதவியி இருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலமாக விஜயை நோக்கி கோரிக்கை வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மிகப்பெரிய சவாலோ, நெருக்கடியோ வரும் நேரத்தில் கட்சி தலைமை இவ்வளவு பெரிய மௌனம் சாதிப்பது சரியா? என கேள்விக்கு எழுப்ப ஆரம்பித்து இருக்கிற விஜய் ரசிகர்கள், அவர்களது கோபத்தை விஜய்க்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த் மீது திருப்பி இருக்கிறார்கள்.
கைதுக்கு பயந்து கொண்டு தலைமுறைவான புஸ்ஸி ஆனந்த் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தாரே தவிர, தொண்டர்களை அடுத்து என்ன செய்ய வேண்டும்? கரூர் விவாகரத்தில் என்ன பதில் சொல்ல வேண்டும்? நிலைமையை எப்படி கையாள வேண்டும்? என எதையும் சொல்லத் தெரியாமல் ஏன் மறைந்து போனார்? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பும் அவர்கள் அடுத்தபடியாக அரசியல் அனுபவம் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என விஜய்க்கு கோரிக்கை வைக்க தொடங்கி இருக்கிறார்கள். கட்சி ஆரம்பித்த ஒன்றரை ஆண்டுகளில் எல்லா மாவட்ட செயலாளர்களும் புஸ்ஸி ஆனந்தின் இமேஜை உயர்த்தவே செலவு செய்திருப்பதாகவும் பேச தொடங்கியுள்ளனர். எந்த ஊருக்கு சென்றாலும் குறைந்தது 30 ஃபார்சூனர் கார்களை ரெடி பண்ண சொல்லி பெரிய ஊர்வலமாக செல்கிறார் என்பதையும் வீடியோவாகவும் போட்டோவாகவும் விஜய்க்கு அனுப்ப தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.