ஆர்சிபி அணியை விற்கப்போறாங்க.!!! போட்டி போடும் 6 நிறுவனங்கள்- யார் யார் தெரியுமா.?
ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியை,. அந்த அணியின் உரிமையாளரான டியாஜியோ குழுமம் அதனை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த அணியை வாங்க 6 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகளவில் பிரபலமான ஒன்று, அதிலும் அதிகளவிலான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி ஆர்.சி.பி, விராட் கோலி பல வருடங்களாக கேப்டனாக வழிநடத்தி வந்த ஆர்.சி.பி அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லையென கிண்டலுக்குள்ளானது. இந்த நிலையில் தான் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது..
இந்த வெற்றியின் மூலம் 17 ஆண்டுகால கனவு நினைவானது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதனையடுத்து பெங்களூரில் ஆர்சிபி அணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் ஆர்சிபி அணி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த பரபரப்பான சூழலில் தான் பெங்களூர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் செய்தி ஒன்று வெளியானது அந்த வகையில் ஆர்சிபி அணி விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் பரவியது.
பிரிட்டனின் Diageo குழுமம் தான் ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள். அணியின் மதிப்பு சுமார் 2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முடிவிற்கு அதன் இந்திய பிரிவு அதற்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனம் வணிக ஆலோசனைக்காக சிட்டி வங்கியை அணுகியுள்ளதாக உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் 6 நிறுவனங்கள் RCB-ஐ வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் முக்கியமானவை அதர் பூனவல்லா (சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர்), JSW குழுமம் (டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் தலைமையிலானது) மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட இரண்டு தனியார் பங்கு நிறுவனங்களும் வாங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு அதர் பூனவல்லாவின் ஒரு ட்வீட் வைரலானது. அவர் கருத்து தெரிவிக்கையில், "சரியான விலை கிடைத்தால் நான் ஆர்சிபியை வாங்கத் தயாராக இருக்கிறேன்." அந்த ட்வீட்டிற்குப் பிறகுதான் அணியின் விற்பனை பற்றிய செய்தி வேகமாகப் பரவியது.
இதனிடையே ஆர்சிபி அணியின் மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை டியாஜியோ மேற்கோள் காட்டுவதால், அவ்வளவு விலை கொடுக்க வாங்க முடியுமா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதர் பூனவல்லாவின் தந்தை சைரஸ் பூனவல்லாவும் அந்த உரிமையை ஏலம் எடுத்தார். ஆனால் அந்த நேரத்தில், புனே மற்றும் கொச்சி அணிகள் வேறு நிறுவனங்களுக்குச் சென்றன.
2022 ஆம் ஆண்டில், அதானி குழுமமும் அகமதாபாத் உரிமையை வாங்க முயற்சித்தது, ஆனால் குறுகிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போது, ஆர்சிபி விற்பனைக்கு வந்தால், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருந்த போதும் பிரிட்டனின் Diageo குழுமம் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.