இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், வானிலை நிலவரம், தங்கம் விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:44 PM (IST) Dec 13
இந்த முடிவு, அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை அதிக வீரியத்துடன் தொடர வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
11:23 PM (IST) Dec 13
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி ஹைதராபாத்தில் நட்புரீதியிலான போட்டியில் கலந்து கொண்ட நிலையில், அவருடன் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
10:58 PM (IST) Dec 13
கோட் இந்தியா டூர் 2025-ன் ஒரு பகுதியாக ஹைதராபாத் வந்த லியோனல் மெஸ்ஸி, ஹைதராபாத் மாநிலத்தின் உப்பல் ஸ்டேடியத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் நட்பு ரீதியான போட்டியில் விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இரண்டு கோல்களையும் அடித்தார்.
10:50 PM (IST) Dec 13
Pathanamthitta: கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் LDF கட்சி தோல்வி அடைந்ததால் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தனது மீசையை இழந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
10:22 PM (IST) Dec 13
கடந்த சில நாட்களாக தவெகவின் நாஞ்சில் சம்பத், நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் இடையேயான வார்த்தை மோதல் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு சென்றுள்ளதால் பொதுமக்கள் தலையில் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
09:59 PM (IST) Dec 13
தமிழ்நாட்டில் உள்ள திமுகவின் மு.க.ஸ்டாலின் அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சர், மாநிலங்களில் பாஜக வெற்றி பெற பசுவின் கோமியம் மட்டுமே ஒரே வழி என்று கூறுகிறார். பசுவின் கோமியம் நச்சு எதிர்ப்பு சக்தி கொண்டது.
08:36 PM (IST) Dec 13
Time Magazine 2025-ம் ஆண்டின் சிறந்த நபராக 'AI சிற்பிகளை' தேர்வு செய்தது டைம் இதழ். எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட 8 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
08:32 PM (IST) Dec 13
OpenAI ஓபன் ஏஐ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட GPT-5.2 மாடலை வெளியிட்டுள்ளது. இது கோடிங் மற்றும் சிந்தனைத் திறனில் சிறந்தது. கூகுள் ஜெமினிக்கு இது கடும் போட்டியாக அமையும்.
08:27 PM (IST) Dec 13
5201314 2025-ல் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய '5201314' என்ற எண்ணின் அர்த்தம் என்ன? இதோ அந்தச் சீன எண்ணின் சுவாரஸ்யமான காதல் பின்னணி.
08:22 PM (IST) Dec 13
Vivo X200T ஐபோன் 17 போன்ற வடிவமைப்பில் விவோ X200T விரைவில் இந்தியா வருகிறது. விலை ரூ.40,000. 6000mAh பேட்டரி மற்றும் பல சிறப்பம்சங்கள் உள்ளே.
08:20 PM (IST) Dec 13
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தலைமை தாங்கும் நிலையில் பாஜகவுக்கு சாதகமான 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
08:15 PM (IST) Dec 13
iPhone 15 ஆப்பிள் ஐபோன் 15 விலையில் மாபெரும் சரிவு! அமேசானில் ரூ.52,990க்கு விற்பனை. எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கி சலுகைகளுடன் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
08:08 PM (IST) Dec 13
Samsung Galaxy S25 சாம்சங் கேலக்ஸி S25 பிளஸ் விலையில் மாபெரும் சரிவு! அமேசானில் எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கிச் சலுகைகளுடன் ரூ.52,499க்கு வாங்குவது எப்படி? முழு விவரம்.
08:02 PM (IST) Dec 13
BSNL பிஎஸ்என்எல் 3300ஜிபி பிராட்பேண்ட் பிளான் விலையில் ரூ.100 குறைப்பு. முதல் 3 மாதங்களுக்கு மாதம் ரூ.399 செலுத்தினால் போதும். முழு விவரம் உள்ளே.
08:01 PM (IST) Dec 13
கொடநாடு வழக்கில் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய மேத்யூ சாமுவேலின் டிரைவர் ஷைஜு, அவரது நண்பரான தீபூ ஆகிய இருவரையும் விசாரித்தால் எஸ்டேட் மேலாளர் உட்பட முக்கிய மூளையாகச் செயல்பட்டவர்கள் பலரும் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
07:57 PM (IST) Dec 13
Nothing Phone 4a நத்திங் போன் 4a மற்றும் 4a ப்ரோ விவரங்கள் கசிந்தன. ஸ்னாப்டிராகன் சிப்செட், 12GB ரேம் மற்றும் 50MP கேமராவுடன் வெளியாகும் எனத் தகவல்.
07:28 PM (IST) Dec 13
ரசம் தென்னிந்திய உணவில் தவிர்க்க முடியாத ஒரு உணவு. பல பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ரசத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இப்போது வீட்டில் எளிதாக செய்யக்கூடிய 10 ரசம் ரெசிப்பிகள் பற்றி பார்க்கலாம்.
07:26 PM (IST) Dec 13
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா வரலாறு படைக்க ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் புதிய மைல்கல்லை எட்டலாம்.
06:47 PM (IST) Dec 13
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளதால், விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் விராட் கோலி சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
06:40 PM (IST) Dec 13
சிவனும், முருகனும் இந்து கடவுளா? இது தொடர்பாக என்னோடு தர்க்கம் செய்ய யாராவது தயாரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
06:38 PM (IST) Dec 13
மினரல் வாட்டரை சூடுப்படுத்தி குடிக்கலாமா.. கூடாதா? அப்படி குடித்தால் என்னவாகும்? இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.
06:38 PM (IST) Dec 13
அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்தால் போதும் உங்களது ஆயுள் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
06:27 PM (IST) Dec 13
டெர்ம் இன்ஷூரன்ஸ் காலக்கெடுவில் காப்பீட்டாளர் உயிரிழந்தால் நியமிக்கப்பட்டவருக்கு முழு காப்புறுதி தொகை வழங்கப்படும்.
05:41 PM (IST) Dec 13
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான துன்புறுத்தல் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
05:39 PM (IST) Dec 13
தினமும் வெறும் வயிற்றில் பூண்டுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
05:25 PM (IST) Dec 13
மதுரை மாநகராட்சி மேயரும், மண்டலக் குழுத் தலைவர்கள் சிலரும் ராஜினாமா செய்ததைத் தவிர, இந்த ஊழலில் திளைத்த மற்றவர்கள் மீது, இதுவரை இந்த விடியா திமுக அரசு சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
05:15 PM (IST) Dec 13
கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில், இது கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
04:33 PM (IST) Dec 13
கேரள உள்ளாட்சித் தேர்தலில் தலைநகர் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை கைப்பற்றி பாஜக மாஸ் காட்டியுள்ளது. கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயராக பதவியேற்க உள்ளார்.
04:31 PM (IST) Dec 13
திருவனந்தபுரத்தில் பாஜகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை நான் ஒப்புக்கொள்கிறேன், மேலும் நகர மாநகராட்சியில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
04:22 PM (IST) Dec 13
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வலதுகரமாக செயல்பட்டவர் டிடிவி தினகரன் என குறிப்பிட்டு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
04:09 PM (IST) Dec 13
Old Pension Scheme: பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்வதாகக் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
04:07 PM (IST) Dec 13
லிப் பாம் வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
03:48 PM (IST) Dec 13
தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்த செல்வராகவன் தற்போது விவாகரத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் மனைவி இன்ஸ்டாவில் புகைப்படங்களை நீக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
03:42 PM (IST) Dec 13
திமுக தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அதிமுக மட்டுமே என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
03:20 PM (IST) Dec 13
துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக, லியோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமும் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
03:14 PM (IST) Dec 13
சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த ராஜேஸ்வரி, தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் கடைசியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது பேசுபொருள் ஆகி உள்ளது.
03:12 PM (IST) Dec 13
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட இந்திய வறண்ட காற்றால் உள் மாவட்டங்களில் குளிர் அதிகரிக்கும்.
02:47 PM (IST) Dec 13
எதிர்க்கட்சிகள், அரசியல் விமர்ச்கர்கள் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுகளை தரம் தாழ்ந்த, கேவலமான பேச்சு என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆர்.எஸ். பாரதி பலமுறை வருத்தம் தெரிவித்த போதிலும், இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளை அவர் கைவிடுவதாக இல்லை.
02:34 PM (IST) Dec 13
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை சென்னை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர் கதவை பூட்டிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் மூலம் கதவை உடைத்து கைது செய்துள்ளனர்.
02:29 PM (IST) Dec 13
தேனி மாவட்டம் தேவாரம் அருகே, திருமணமான மூன்று மாதங்களில் ஏற்பட்ட தகராறில், கணவர் பிரிந்து சென்ற மனைவியை சீர் பொருள் எடுக்க வந்த இடத்தில் வெட்டிக் கொலை செய்தார். தடுக்க வந்த மனைவியின் சகோதரரையும் கணவரின் தந்தை குத்திக் கொலை செய்துள்ளார்.