Longevity Lifestyle Tips : வெறும் '3' தினசரி பழக்கங்கள் நீண்ட நாள் ஆரோக்கியம் உறுதி
அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்தால் போதும் உங்களது ஆயுள் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

Longevity Lifestyle Tips
யாருதான் நீண்ட நாள் உயிர் வாழ விரும்ப மாட்டார்கள். அதுவும் ஆரோக்கியத்துடன். நீங்களும் இப்படித்தான் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ விரும்புகிறீர்கள் என்றால் உங்களது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை மட்டும் செய்தால் போதும். உங்களது ஆயுள் கூடும் என்கின்றனர் நிபுணர்கள். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை நல்லதல்ல
வயது ஏறும்போது அதிக சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது வீக்கத்தை அதிகரித்து, திசு சேதத்தை ஏற்படுத்தும். கூடுதல் சர்க்கரையைக் குறைத்தால், உடலில் வீக்கம் குறையும், ஆற்றல் நிலைகள் சீராக இருக்கும், சோர்வு குறையும்.
உடற்பயிற்சி செய்தல்
வயது அதிகரிக்கும்போது தசைகளின் வலிமை குறைகிறது. இதைத் தடுக்க, வலிமைப் பயிற்சி முக்கியம். தொடர்ந்து பளு தூக்குதல் செய்தால், தசைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சிறப்பாகப் பயன்படுத்தும். இதனால் குளுக்கோஸ் கட்டுப்பாடு மேம்படும். இது டைப்-2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரே மாதிரியான உடற்பயிற்சி போதாது. வலிமைப் பயிற்சி, கார்டியோ மற்றும் மொபிலிட்டி பயிற்சிகளை இணைத்துச் செய்ய வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது அல்லது சைக்கிள் ஓட்டுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
நல்ல தூக்கம்
நல்ல தூக்கம் நேரடியாக ஆயுட்காலத்தை பாதிக்கிறது. போதுமான தூக்கம் ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்கிறது, பசியைக் கட்டுப்படுத்துகிறது. தினமும் 7-9 மணிநேரம் தூங்கினால், ஆற்றல் மேம்படும், நோய்களின் ஆபத்து குறையும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

