3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி ஹைதராபாத்தில் நட்புரீதியிலான போட்டியில் கலந்து கொண்ட நிலையில், அவருடன் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
கோட் இந்தியா டூர் 2025-ன் ஒரு பகுதியாக ஹைதராபாத் வந்த லியோனல் மெஸ்ஸி, ஹைதராபாத் மாநிலத்தின் உப்பல் ஸ்டேடியத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் நட்பு ரீதியான போட்டியில் விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது தனது கையொப்பமிட்ட ஜெர்சியை ராகுலுக்க மெஸ்ஸி பரிசாக வழங்கினார். முன்னதாக ஹைதராபாத் மைதானத்தில் ஜெர்சி அணிந்து அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாடினார். முன்னதாக காலை கொல்கத்தாவில் நடைபெற்ற ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலையில் ஹைதராபாத் நகரை சென்றடைந்த மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

