- Home
- Sports
- Football
- இந்தியாவில் கால்பந்து கிங் லியோனல் மெஸ்ஸி.. அடியாத்தி! அவருடன் போட்டோ எடுக்க இத்தனை லட்சம் கட்டணமா?
இந்தியாவில் கால்பந்து கிங் லியோனல் மெஸ்ஸி.. அடியாத்தி! அவருடன் போட்டோ எடுக்க இத்தனை லட்சம் கட்டணமா?
கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியாவில் கால் பதித்த மெஸ்ஸி
கால்பந்து உலகின் ஜாம்பவான் அர்ஜெண்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இந்திய நேரப்படி நள்ளிரவு கொல்கத்தா விமான நிலையத்தில் மெஸ்ஸி வந்திறங்கினார். அவருடன் நெருங்கிய கிளப் நண்பர் உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், அர்ஜென்டினா வீரர் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் வந்தனர்.
GOAT இந்தியா டூர் 2025'
லியோனல் மெஸ்ஸியை காண நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். பல மணி நேரம் காத்துக்கிடந்த அவர்கள் மெஸ்ஸியை பார்த்ததும் உற்சாகமாக கோஷம் போட்டனர்.
2011-க்குப் பிறகு மெஸ்ஸி இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை. 'GOAT இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின்படி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள லியோனல் மெஸ்ஸி, இன்று காலை முக்கிய நபர்களை சந்தித்தார்.
70 அடி உயர தனது சிலையை திறந்து வைத்தார்
பின்பு கொல்கத்தாவின் லேக் டவுனில் உள்ள ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் நிறுவப்பட்டுள்ள தன்னுடைய 70 அடி உயர சிலையை மெஸ்ஸி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
கொல்கத்தாவின் தெற்கு டம் டம் பகுதியில் உள்ள லேக் டவுனில் 70 அடி உயர இரும்புச் சிலையை ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப் நிறுவியுள்ளது.
இந்தச் சிலை, மெஸ்ஸி ஃபிஃபா உலகக் கோப்பையை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கிறது. இது அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பை வெற்றியின் அடையாளமாக உள்ளது.
ஷாருக்கான் சந்தித்தார்
கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியை பாலிவுட் கிங் காங் நடிகர் ஷாருக்கான் சந்தித்து பேசினார். பின்பு கொல்கத்தாவின் யுவ பாரதி மைதானத்துக்கு செல்லும் மெஸ்ஸியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஷாருக்கான், கிரிக்கெட்டின் தாதா சவுரங் கங்குலி ஆகியோர் உற்சாகமாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
ஹைதராபாத்தில் கால்பந்து விளையாடும் மெஸ்ஸி
இதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும் மோகன் பாகன் மற்றும் டயமண்ட் ஹார்பர்ஸ் இடையே ஒரு நட்புரீதியான போட்டி நடைபெறுகிறது. இதை கண்டுகளிக்கும் மெஸ்ஸி அதன்பிறகு ஹைதராபாத் புறப்பட்டு செல்கிறார். இன்று இரவு 7 மணிக்கு ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் லியோனல் மெஸ்ஸி பங்கேற்கும் 7v7 போட்டி நடைபெறுகிறது.
பிரதமர் மோடியை சந்திக்கிறார்
அங்குகிருந்து மும்பை திரும்பும் மெஸ்ஸி, நாளை (டிசம்பர் 14) இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பையில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். நாளை மறுநாள் (டிசம்பர் 15) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மெஸ்ஸி சந்திக்கிறார்.
மெஸ்ஸின் வருகையையொட்டி அவர் செல்லும் கொல்கத்தா, மும்பை, ஹைதராபத் மற்றும் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெஸ்ஸியுடன் போட்டோ எடுக்க ரூ.10 லட்சம்
இதற்கிடையே மெஸ்ஸிடன் சேர்ந்து போட்டோ எடுக்க ரூ.9.95 லட்சம் (பிளஸ் ஜிஎஸ்டி) என கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். இதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

