- Home
- Sports
- Football
- Messi-PM Modi: கடைசி நேரத்தில் பிரதமர் மோடி-மெஸ்ஸி சந்திப்பு ரத்து..! இதுதான் காரணம்!
Messi-PM Modi: கடைசி நேரத்தில் பிரதமர் மோடி-மெஸ்ஸி சந்திப்பு ரத்து..! இதுதான் காரணம்!
டெல்லியில் மெஸ்ஸி பிரதமர் மோடியை சந்தித்து பேசும் நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டுருந்தது. பிரதமரை சந்திக்க மெஸ்ஸிக்கு 21 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்தியாவில் லியோனல் மெஸ்ஸி
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். முதல் நாளில் தனது 75 அடிய உயர சிலையை திறந்து வைத்த மெஸ்ஸி, கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களின் வரவேற்பால் திக்குமுக்காடி போனார்.
ஆனால் கொல்கத்தாவில் ரசிகர்களின் ரகளையில் போய் முடிந்தது. மெஸ்ஸி வெறும் 20 நிமிடமே இருந்ததால் ரசிகர்கள் ஆவேசமடைந்து நாற்காலி, தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தியை சந்தித்த மெஸ்ஸி
முதல் நாளில் கொல்கத்தாவில் இருந்து ஹைதராபத் சென்ற மெஸ்ஸி நட்புறவு போட்டியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து கால்பந்து விளையாடினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.
இதன் பின்பு நேற்று 2வது நாளில் மும்பை வந்த மெஸ்ஸி வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி மற்றும் அவரது பெங்களூரு எஃப்சி அணி வீரர்கள் தலைமையிலான மித்ரா ஸ்டார்ஸ் அணிக்கு இடையிலான கால்பந்து போட்டியை கண்டு ரசித்தார்.
மெஸ்ஸிக்கு பரிசு வழங்கிய சச்சின்
ஸ்டாண்டுகளில் கால்பந்துகளை உதைத்து ரசிகர்களை மகிழ்வித்தார். சேத்ரிக்கு கையொப்பமிடப்பட்ட அர்ஜென்டினா ஜெர்சியையும் வழங்கினார். மேலும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினையும் சந்தித்தார்.
அப்போது சச்சின் மெஸ்ஸிக்கு டீம் இந்தியா ஜெர்சியை வழங்கினார். இன்று 3வது நாள் டெல்லி சென்ற மெஸ்ஸி சுவாரஸ் மற்றும் டி பால் ஆகியோருடன் அருண் ஜெட்லி மைதானத்துக்கு வந்தார். ரசிகர்கள் அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
டெல்லியில் இன்று மெஸ்ஸி
மைதானத்தில் இருந்த இளைஞர்களுடன் கால்பந்து விளையாடினார். ஐசிசி தலைவர் ஜெய் ஷா மெஸ்ஸி, ரோட்ரிகோ டி பால் மற்றும் லூயிஸ் சுவாரஸ் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிகளை பரிசளித்தார்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் டிடிசிஏ தலைவர் ரோஹன் ஜெட்லி ஆகியோரையும் மெஸ்ஸி சந்தித்தார். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு மெஸ்ஸிக்கு ஜெய் ஷா அழைப்பு விடுத்தார். மேலும், அந்த நிகழ்விற்கான முதல் டிக்கெட்டை அவருக்கு வழங்கினார்.
மெஸ்ஸி பிரதமர் மோடி சந்திப்பு ரத்து
இதற்கிடையே இன்று டெல்லியில் மெஸ்ஸி பிரதமர் மோடியை சந்தித்து பேசும் நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டுருந்தது. பிரதமரை சந்திக்க மெஸ்ஸிக்கு 21 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்படது. ஏனெனில் கடும் பனிமூட்டம் காரணமாக மும்பையில் இருந்து டெல்லி வந்த மெஸ்ஸின் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமானது.
இதுதான் காரணம்
அதே நேரத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க ஓமன், எத்தியோப்பியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். மெஸ்ஸி விமானம் தாமதமானதாலும், பிரதமரின் வெளிநாட்டு பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்ததாலும் பிரதமர் மோடி மெஸ்ஸி சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டது.

