இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:08 PM (IST) Aug 13
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கேவிடம் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ருத்ராஜ் கெய்க்வாட், ஜடேஜாவை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11:03 PM (IST) Aug 13
சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம், தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் ராகுல் காந்தியின் பதிவு, திமுகவில் இணைந்த அதிமுக மூத்த தலைவர் மைத்ரேயன் உள்ளிட்ட இன்றைய தினத்தின் டாப் 10 முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.
10:55 PM (IST) Aug 13
Lokesh Kanagaraj Statement About Coolie Movie : கூலி படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
10:22 PM (IST) Aug 13
கூலி படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இலங்கையில் ப்ரீ புக்கிங்கில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்று பார்க்கலாம்.
10:14 PM (IST) Aug 13
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பின் இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக வெளியிடப்பட்ட 10 தொகுதிகள் இரண்டு மாதங்களில் 2,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
10:11 PM (IST) Aug 13
கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மினிமம் பேலன்ஸ் தொகையை ஐசிஐசிஐ வங்கி குறைத்துள்ளது. புதிய மினிமம் பேலன்ஸ் தொகை எவ்வளவு? என விரிவாக பார்ப்போம்.
09:34 PM (IST) Aug 13
Latha Rajinikanth Coolie Movie First Review : கூலி படம் பார்த்த லதா ரஜினிகாந்த் தனது முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
09:28 PM (IST) Aug 13
வாக்காளர் பட்டியலில் 'இறந்தவர்கள்' எனக் குறிப்பிடப்பட்டவர்களுடன் ராகுல் காந்தி தேநீர் அருந்தினார். தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடினார்.
09:28 PM (IST) Aug 13
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) Probationary Officer பணிக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. எந்தப் பட்டதாரியும் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹72,000 வரை சம்பளம். ஆகஸ்ட் 20, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
09:21 PM (IST) Aug 13
AI, டிஜிட்டல் மார்க்கெட்டிங், சைபர் செக்யூரிட்டி போன்ற புதிய திறன்களை இலவச ஆன்லைன் படிப்புகள் மூலம் கற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள். உங்கள் சொந்த வேகத்தில் கற்று, சான்றிதழ்களுடன் உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்குங்கள்!
09:15 PM (IST) Aug 13
ஃபிளிப்கார்ட்டில் சுதந்திர தின விற்பனை தொடங்கியுள்ளது. எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கும்? கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் உண்டா? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
09:13 PM (IST) Aug 13
மாணவர் கடனை விரைவாக அடைக்க எளிய வழிகாட்டி. பட்ஜெட், சேமிப்பு, மறுநிதியளிப்பு மற்றும் கடன் தள்ளுபடி திட்டங்கள் மூலம் உங்கள் கடனை செலுத்தி, உங்கள் கடன் மதிப்பெண்ணை மேம்படுத்தலாம்.
09:00 PM (IST) Aug 13
கல்லூரி மாணவர்களுக்கு TMB அறக்கட்டளை கல்வி உதவித்தொகை. 75% வரை கல்வி கட்டணம் வழங்கப்படும். தகுதி, ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிய இப்போதே பார்க்கவும்!
08:32 PM (IST) Aug 13
தீமிதி திருவிழாவில் ரேவதியை காப்பாற்றவே, அவரும் நல்ல படியாக தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்த நடக்க முடியாமல் தவித்த அவரை கார்த்தி தூக்கி செல்லும் காட்சி கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
08:25 PM (IST) Aug 13
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 2,800 நாய்களைக் கொன்றதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்சி எஸ்.எல். போஜேகவுடா கர்நாடக சட்ட மேலவையில் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறைக்குச் செல்லவும் தயார் என்றார்.
08:16 PM (IST) Aug 13
நெல்லையில் கவின் ஆணவக்கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
07:44 PM (IST) Aug 13
Pandian Stores 2 Serial Today 559th Episode : கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல புறப்பட்ட அரசியை தாங்கு தாங்குன்னு தாங்கும் அண்ணன்கள் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
07:40 PM (IST) Aug 13
கிட்னியை திருடிய பணத்தில் திமுக எம்.எல்.ஏ., கதிரவன் Rolls-royce காரில் வலம் வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
07:32 PM (IST) Aug 13
எண் கணிதத்தின் படி, எந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்கள் கணவருக்கு பண விஷயத்தில் ஆதரவாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
07:20 PM (IST) Aug 13
கிருஷ்ண ஜெயந்தியன்று, பக்தர்கள் கிருஷ்ணரை மணம் மிக்க மலர்களால் அலங்கரிக்கின்றனர். ஒவ்வொரு மலரும் ஒரு ஆழமான குறியீட்டைக் கொண்டுள்ளது, இது கொண்டாட்டத்தை மேலும் தெய்வீகமாகவும் அழகாகவும் ஆக்குகிறது.
07:00 PM (IST) Aug 13
Sun Ketu Conjunction Effects 4 Zodiac Signs in Tamil : ஜோதிடத்தில் சூரியன் மற்றும் கேது ஒரே ராசியில் இணைவது 4 ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். அந்த ராசியினர் பற்றி பார்க்கலாம்.
06:49 PM (IST) Aug 13
இலங்கையில் இருந்து இளம்பெண் ஒருவர் காதலனை தேடி சட்டவிரோதமாக படகில் ராமேஸ்வரம் வந்தார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
06:48 PM (IST) Aug 13
உங்களது முகத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்க இந்த 5 மஞ்சள் ஃபேஸ் பேக்குளை ட்ரை பண்ணி பாருங்க.
06:37 PM (IST) Aug 13
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வாக்காளர்களுக்கு ஆதரவாகவே இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு ஆவணங்களை ஏற்பதன் மூலம் வாக்களிக்கும் உரிமையை எளிதாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
06:34 PM (IST) Aug 13
‘’தற்போதைய அரசியல் சூழல், சில தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் காரணமாக ராகுல் காந்தியின் உயிருக்கு கடுமையான ஆபத்து உள்ளது''
06:12 PM (IST) Aug 13
Karthik Going To save His Wife Revathi : கார்த்திகை தீபம் 2 சீரியலில் மைதிலியை காப்பாற்றிய கார்த்திக் தனது மனைவி மற்றும் மச்சினிச்சியை காப்பாற்றினாரா இல்லையா என்பது இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
05:43 PM (IST) Aug 13
உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பூண்டு எவ்வாறு உதவுகிறது என்பதை மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.
05:33 PM (IST) Aug 13
Madharaasi Glipmse Video : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி படம் உலகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் நிலையில் மதராஸி படத்தின் கிளிம்ஸ் வீடியோவும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
05:33 PM (IST) Aug 13
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜய் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
05:28 PM (IST) Aug 13
சில வீட்டு வைத்தியங்கள் மட்டுமே சிறப்பாக செயல்படும். அவை நிரூபிக்கப்பட்டும் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த சிறப்பு ஆயுர்வேத எண்ணெய். இது உங்களுக்கு மந்திரம் போல வேலை செய்யும்.
05:28 PM (IST) Aug 13
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூட்டப்பதற்காக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
05:11 PM (IST) Aug 13
மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற பைதானி சேலை லண்டன் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. லண்டனுக்குச் சென்ற அமைச்சர் ஆஷிஷ் ஷெலாரின் முன்மொழிவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
05:09 PM (IST) Aug 13
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும்.
05:02 PM (IST) Aug 13
சில வாழ்க்கைத் திறன்கள் நம் முன்னேற்றத்திற்கு உதவும். அவை ஒவ்வொருவருக்கும் அவசியமானவை. ஒவ்வொருவருக்கும் தேவையான 10 வாழ்க்கைத் திறன்கள் என்னவென்று தெரிந்து கொள்வோமா.?
04:49 PM (IST) Aug 13
பெற்றோர் தங்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்களை குறித்து இங்கு காணலாம்.
04:37 PM (IST) Aug 13
‘ ‘உணவு கிடைப்பதால், 48 மணி நேரத்திற்குள், மூன்று லட்சம் நாய்கள் வரும். நாய்களை அகற்றியவுடன் குரங்குகள் தெருக்களுக்கு வரும்... இது என் வீட்டிலும் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்”.
04:37 PM (IST) Aug 13
6 மாதமாக கிரிக்கெட் விளையாடாத ரோகித் சர்மா ஓடிஐயில் 2வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். இது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
04:25 PM (IST) Aug 13
சிறுவயதிலேயே முடி உதிர்தலுக்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
04:18 PM (IST) Aug 13
Taurus Zodiac Signs Aavani Month Horoscope : ரிஷப ராசியைப் பொறுத்த வரையில் தமிழ மாதமான ஆவணி மாதம் (ஆகஸ்ட் 17 - செப்டம்பர் 17) விரிவான ராசி பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
04:06 PM (IST) Aug 13
துமகூருவில் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பெண்ணின் மருமகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவரின் மருமகன் ராமச்சந்திரய்யா, சதீஷ் மற்றும் கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.