MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடல்! 'பெயிலியர்' மாடல் அரசு! ஸ்டாலினை புரட்டியெடுத்த இபிஎஸ்!

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடல்! 'பெயிலியர்' மாடல் அரசு! ஸ்டாலினை புரட்டியெடுத்த இபிஎஸ்!

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூட்டப்பதற்காக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

3 Min read
Rayar r
Published : Aug 13 2025, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
EPS Condemns Closure Of 207 Government Schools In Tamil Nadu
Image Credit : our own

EPS Condemns Closure Of 207 Government Schools In Tamil Nadu

தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இல்லாததால் 207 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம். இனி நிகழ்த்துவதற்கு மந்தஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுகவின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

25
கல்வித்துறையை சீரழித்த திமுக அரசு
Image Credit : our own

கல்வித்துறையை சீரழித்த திமுக அரசு

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், ''கவ்வித் துறையை கடந்த 51 மாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி சீரழித்துவிட்டதை மக்கள் உணரத் துவங்கியிட்டார்கள். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மூலம் நடத்தப்படும் கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றும், அதற்கு போதுமான ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் நியமிக்கப்படாததே காரணம் என்றும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக இந்த அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.

உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவரான அமைச்சர்

மேலும், அரசுப் பள்ளிகளின் அருகிலேயே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையால், பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதிலேயே பாதை மாறுகின்ற நிலையைப் பற்றியும். போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தியும், தக்க நடவடிக்கை எடுக்காத பொம்மை முதமைச்சர், தற்போதுதான் மாணவர்களை 'போதையின் பாதையில் செல்லாதீர்கள்' என்று விளம்பரங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகிறார். இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வாரிசு உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக்கேடானது.

Related Articles

Related image1
திமுகவில் இணைந்த மைத்ரேயன்! அடுத்த நொடியே ஆக்ஷனில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி!
Related image2
அடிமைத்தனம் பற்றி பழனிசாமி பேசலமா? எடப்பாடியை பிச்சு உதறிய முதல்வர் ஸ்டாலின்!
35
பெவிலியர் மாடல் அரசு
Image Credit : Asianet News

பெவிலியர் மாடல் அரசு

தி.மு.க. ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த பெயிலியர் மாடல் அரசு கனகச்சிதமாக செய்து வருவதாகவும், பள்ளிகளை மூடுவதாக அறிவித்ததன் மூலம் 207 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

207 அரசுப் பள்ளிகள் மூடல்

நீலகிரி மாவட்டத்தில் 17, சிவகங்கை 15, திண்டுக்கல் -12. சென்னை -10, ஈரோடு -10. பருரை 10, கோவை 9. ராமநாதபுரம் 9. தூத்துக்குடி -8& தருமபுரி, திருப்பூர் மற்றும் மிருதுநகரில் தலா 7. கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் மற்றும் நாமக்கல்லில் தலா 5 என்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 207 அரசுப் பள்ளிகளை இந்த பெயிலியர் மாடல் ஸ்டாமின் அரசு மூடியுள்ளது இந்த 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டு வருவதாக நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

45
அப்பாவி மக்கள் மீது பழிபோடும் திமுக‌
Image Credit : ANI

அப்பாவி மக்கள் மீது பழிபோடும் திமுக‌

நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க அரசு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக் கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, திட்டமிட்டு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காம அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது. இச்செயலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

55
பள்ளிக்கல்வித்துறை அறிக்கை விரோதமானது
Image Credit : our own

பள்ளிக்கல்வித்துறை அறிக்கை விரோதமானது

207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளது குறித்து நான் பேசியதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததாலும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதாலும், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடுகிறோம் என்று ஒரு விரோதமான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. 

இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும்'' என்றார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திமுக
எடப்பாடி பழனிசாமி
மு. க. ஸ்டாலின்
அரசியல்
பள்ளி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved