- Home
- Cinema
- Madharaasi Glipmse Video : தலைவரோடு தரிசனம் தரும் எஸ்கே - கூலிக்கு இடையில் மதராஸி கிளிம்ஸ்; பக்கா மாஸ்ல!
Madharaasi Glipmse Video : தலைவரோடு தரிசனம் தரும் எஸ்கே - கூலிக்கு இடையில் மதராஸி கிளிம்ஸ்; பக்கா மாஸ்ல!
Madharaasi Glipmse Video : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி படம் உலகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் நிலையில் மதராஸி படத்தின் கிளிம்ஸ் வீடியோவும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ல் எதிர்பார்க்கப்பட்ட கூலி நாளை ஆகஸ்ட் 14 ரிலீஸ்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் உலகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17ஆம் தேதிகள் தொடர் விடுமுறை என்பதால் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி படம் வெளியாகிறது. மாஸ்டர், லியோ, விக்ரம் ஆகிய படங்களின் வரிசையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜூனா, சௌபின் ஷாகிர், காளி வெங்கட், ஸ்ருதி ஹாசன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் அண்ட் லோகேஷ் கனகராஜ்
கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் ப்ரீ புக்கிங் மற்றும் ஓடிடி உரிமை மூலமாக இந்தப் படம் தயாரிப்பாளருக்கு ரூ.300 கோடி வரையில் லாபம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரஜினிகாந்தின் கூலி படமும் ஒன்று. அதோடு, இதுவரையில் எந்த கோலிவுட் படமும் ரூ.1000 கோடி வரையில் வசூல் குவிக்காத நிலையில் அதனை சூப்பர் ஸ்டாரின் கூலி படம் அசால்டாக முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1000 கோடி வசூல் குவிக்குமா கூலி?
அமீர் கான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம் பெற்ற மோனிகா என்ற பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ரீலீஸ் மோடில் வைரலானது. இந்த நிலையில் தான் கூலி படம் நாளைக்கு திரையிடப்படும் அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி கிளிம்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய் அரசியலுக்கு சென்ற நிலையில் அவரது இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டதாக பேச்சு அடிபட்டது. இந்த சூழலில் தான் மதராஸி படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று அதற்கான வாய்ப்பை சிவகார்த்திகேயனுக்கு உருவாக்கி கொடுத்துள்ளது. மேலும், இதுவரையில் காமெடி ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் மாஸ் ஹீரோ என்ற அடையாளத்தை கொடுத்தது.
ஏ ஆர் முருகதாஸ், மதராஸி கிளிம்ஸ் வீடியோ, சிவகார்த்திகேயன்
அதோடு, அமரனுக்கு பிறகு சிவகார்த்திகேயன் பெரிய பெரிய இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். அடுத்தடுத்து படங்களும் வெளியாக இருக்கின்றன. ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மதராஸி வரும் 15 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அடுத்ததாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படமும் வெளியாக இருக்கிறது.
மதராஸி கிளிம்ஸ் வீடியோ
இப்படி அடுத்தடுத்து படங்களால் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் இனி வரும் காலங்களில் ரூ.1000 கோடி வசூல் கொடுத்த ஹீரோ என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதராஸி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியான நிலையில் அடுத்ததாக கிளிம்ஸ் வீடியோ வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.