நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகைகள்; 2025 ல் திருமணம் செய்த நடிகைகளின் பட்டியல்!
List of Tamil Actresses Married in 2025 : 2025 ஆம் ஆண்டு திருமணம் செய்த நடிகர், நடிகைகள் யார் யார் என்று இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

List of Tamil Actresses Married in 2025
திருமணம் என்பது அனைவருக்கும் அவசியமானதுதான். ஓவ்வொருவருக்கும் சரியாக அமைவதும் சரியில்லாமலும் அமைகிறது. நடிகைகள் அவரது தொழிலில் மட்டுமே பிசியாக இருந்து வருகிறார்கள் அதில் ஒரு புறமாக தனது திருமணம் குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள் பிஸியாக இருக்கும் வாழ்க்கையில் பல பிரச்சனைகளும் வந்து போகிறது. சரியான துணையர் இருந்தால் மட்டுமே எதிலும் வெற்றி பெற முடியும். 2025 இந்த ஆண்டு நிறைவு பெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது இந்த ஆண்டில் எந்த நடிகை எல்லாம் திருமணம் செய்து கொண்டார் என்று பார்க்கலாம்.
1.சமந்தா:
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா தற்போது திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் இயக்குனரான ராஜ் நிடிமோருவை டிசம்பர் 1ம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். ஈஷா யோக மையத்திலுள்ள லிங்கபைரவி கோவிலில் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். சமந்தாவுக்கும் ராஜுக்கும் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.
2.சம்யுக்தா:
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான சம்யுக்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நவம்பர் 27ஆம் நாள் இவர்களின்திருமணம் மிகவும் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் தன் மகன் ராயன் கல்யாணத்திற்கு அழகாக ரெடி செய்தார். தனது திருமண வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தார் சம்யுக்தா என்று ரசிகர் மத்தியில் கூறப்பட்டது.
3. பிரியங்கா:
விஜய் டிவியின் புகழ் பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். நீண்ட நாளாக இருவரும் காதலித்து வந்தனர் தற்போது இருவரும் கரம் பிடித்தனர் என்று கூறப்படுகிறது. டிஜே வாசியை திருமணம் செய்து கொண்டார் தோற்றத்தை உடைய வாசி பிரியங்காவை திருமணம் செய்து கொண்ட போட்டோவை பிரியங்கா தனது இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளார். இருவரும் வெகு நாளாக காதலித்து ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
சாக்ஷி அகர்வால்
நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளரான சாக்ஷி அகர்வாலுக்கும், தொழில் அதிபரான நவ்னீத் மிஸ்ராவுக்கும் ஜனவரி மாதம் கோவாவில் திருமணம் நடந்தது. நவ்னீத்துக்கும், சாக்ஷி அக்ரவாலுக்கும் சிறுவயதில் இருந்தே பழக்கம். இத்தனை ஆண்டுகளாக ஒன்றாக இருந்தவர்கள் இந்த ஆண்டு கணவன், மனைவியாகிவிட்டார்கள். சாக்ஷியின் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில் சாட்சி தனது இணையதளத்தில் பதிவுக்கு பதிவிட்டார்.
அபிநயா:
நாடோடிகள் படத்தால் ரசிகர்களை நடிப்பை பற்றியே பேச வைத்த அபிநயாவுக்கும், அவரின் காதலர் சன்னி வர்மாவுக்கும் ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. சன்னி வர்மாவும், அபிநயாவும் ஒராண்டு இரண்டு ஆண்டுகள் இல்லை 15 ஆண்டுகளாக காதலித்திருக்கிறார்ள். அபிநயாவால் காதும் கேட்காது பேசவும் முடியாது. ஆனால் இவர் சினிமாத்துறையில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் என்றே கூறலாம் இவர் வெகு நாளாக காதலித்து வந்ததே தன் அம்மாவிடம் கூற அவர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர் என் கணவர் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் நான் என்ன சொன்னாலும் எனக்கு சப்போர்ட்டாகவே இருப்பார் என்று கூறியுள்ளார். அவரும் வாய் பேசிய முடியாத நபர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னைப் போல் ஒருவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பாவனி ரெட்டி:
கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி பிக் பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி, சக பிக் பாஸ் போட்டியாளரான அமீரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாவனிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் பிக் பாஸ் இன் வீட்டின் உள்ளே காதலித்து வந்தனர் பவானியின் கணவர் இருந்த நிலையில் அவர் தனியாகவே இருந்து வந்தார். அதன் பிறகு பிக் பாஸ் எனும் அமீர் ஒரு கண்டஸ்டன்ட்டாக நுழைந்து பவானியை காதலித்தார் தற்போது இவர் பவானியை கல்யாணம் செய்து கொண்டார். பவானியின் மாமியாரை இவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளார் என்பது ரசிகர் மத்தியில் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.