- Home
- Sports
- Sports Cricket
- Rohit Sharma: 6 மாதமாக கிரிக்கெட் விளையாடாத ரோகித் சர்மா ஓடிஐயில் 2வது இடம்! எப்படி தெரியுமா
Rohit Sharma: 6 மாதமாக கிரிக்கெட் விளையாடாத ரோகித் சர்மா ஓடிஐயில் 2வது இடம்! எப்படி தெரியுமா
6 மாதமாக கிரிக்கெட் விளையாடாத ரோகித் சர்மா ஓடிஐயில் 2வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். இது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

How Rohit Sharma Became 2nd In ODIs
இந்திய ஓடிஐ அணி கேப்டன் ரோகித் சர்மா ஐசிசி ஓடிஐ தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 38 வயதான ரோகித் சர்மா விரைவில் ஓடிஐயில் இருந்து ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில், அவர் 2வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் ஓடிஐ தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஐசிசி புதிய தரவரிசையை வெளியிட்டது.
ஓடிஐ ரேங்கில் ரோகித் சர்மா 2வது இடம்
இந்த தொடரில் மோசமான ஃபார்மில் இருந்த பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா 2வது இடத்தைப் பிடித்தார். ஓடிஐ தரவரிசையில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். கில்லை விட 28 புள்ளிகள் குறைவாக ரோகித்துக்கு 756 ரேட்டிங் புள்ளிகள் உள்ளன, அதே நேரத்தில் பாபர் அசாம் 751 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். முன்னாள் கேப்டன் விராட் கோலி 736 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் 9வது இடம்
அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் சிறப்பாக செயல்பட்டால் ரோகித் சர்மா மற்ரும் விராட் கோலி தங்கள் தரவரிசையை மேம்படுத்திக் கொள்ளலாம். 8வது இடத்தில் உள்ள ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பத்து இடங்களுக்குள் உள்ள மற்றொரு இந்திய வீரர் ஆவார்.
நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செல் இலங்கையின் சரித் அசலங்கா, அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஆகியோர் முதல் ஏழு இடங்களில் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் இலங்கையின் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளனர்.
ஓடிஐ அணியில் இந்திய அணி தான் டாப்
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் மஹீஷ் தீக்ஷனா முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 2வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 9வது இடத்திலும் உள்ளனர். ஓடிஐ அணிகள் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன.
இந்திய ஓடிஐ அணி கேப்டன் ரோகித் சர்மா கடந்த மார்ச் மாதத்திலிருந்து எந்த ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாடாவில்லை. ஆனாலும் அவர் ஓடிஐயில் 2வது இடத்தை பிடித்தது எப்படி? என உங்களுக்கு கேள்வி எழலாம்.
ரோகித் சர்மா 2வது இடம் பிடித்தது எப்படி?
பொதுவாக ஐசிசி ரேங்க் புள்ளிகள் சமீபத்திய ஆட்டங்களின் அடிப்படையில் அதில் வீரர்கள் செயல்பாடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில், பாபர் அசாம் மூன்று போட்டிகளில் வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதன் காரணமாக அவர் புள்ளிகள் வெகுவாக குறைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ரோகித் சர்மா மார்ச் மாதத்திற்குப் பிறகு எந்த ஒருநாள் போட்டியிலும் பங்கேற்காததால் அவரது புள்ளிகள் மாறாமல் அப்படியே இருந்தன. ஆனால் பாபர் அசாம் சரியாக விளையாடாததால் அவர் புள்ளிகள் குறைந்து ரோகித் சர்மா முன்னேறியுள்ளார்.