- Home
- Sports
- Sports Cricket
- ரோகித் சர்மாவை கழட்டி விடும் பிசிசிஐ? ஓடிஐ அணிக்கும் கேப்டனாகும் சுப்மன் கில்! என்ன நடந்தது?
ரோகித் சர்மாவை கழட்டி விடும் பிசிசிஐ? ஓடிஐ அணிக்கும் கேப்டனாகும் சுப்மன் கில்! என்ன நடந்தது?
ரோகித் சர்மாவை கழட்டி விட்டு ஓடிஐ அணிக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Shubman Gill Gets Chance To Be India's ODI Captain
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்து சாதனை படைத்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் கொண்ட அணியே இங்கிலாந்து சென்றது. இதனால் இங்கிலாந்து அணி 4-1 அல்லது 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என முன்னாள் வீரர்கள் பலர் கணித்தனர். ஆனால் இந்த கணிப்புகளை பொய்யாக்கும்விதமாக இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்தனர்.
கேப்டன்சியில் அசத்திய சுப்மன் கில்
அதிலும் மிக முக்கியமாக கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கில் மட்டுமின்றி கேப்டன்சியிலும் சிறப்பாக செயல்பட்டார். பீல்டிங் வியூகங்களை வகுப்பது, பவுலர்களை ரொட்டேட் செய்வது, பவுலர்களுடன் பிளான் போட்டு எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது என சுப்மன் கில் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். இப்படி முதல் தொடரிலேயே சுப்மன் கில் அசத்தியுள்ளதால் அவரை ஓடிஐ அணிக்கும் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கழட்டி விடப்படும் ரோகித் சர்மா
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் படுதோல்வியை சந்தித்ததால் அவர் கேப்டன் பதவியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.
மேலும் பிசிசிஐயின் நிர்பந்தம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வும் பெற்றார். ரோகித் சர்மாவுக்கு இப்போது வயதாகி விட்டதால் அவர் இன்னும் ஒரிரு ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாட முடியும்.
இதனை கருத்தில் கொண்டு தான் சுப்மன் கில்லை ஓடிஐ அணிக்கும் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. சுப்மன் கில் இளம் வீரர் என்பதாலும், பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதாலும் அவரால் நீண்ட காலம் கேப்டனாக செயல்பட முடியும் என பிசிசிஐ நம்புகிறது.
ஓடிஐயில் கேப்டனாகும் சுப்மன் கில்
இதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து விட்டதால் டெஸ்ட் கிரிக்கெட்டை போல் ஓடிஐயிலும் ரோகித் சர்மா விரைவில் ஓய்வு பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், சுப்மன் கில்லை ஓடிஐ அணிக்கும் கேப்டனாக்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், ''ரோகித் சமாவின் ஒருநாள் கேப்டன்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், சுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தொடர்ந்து சிறப்பாக ரன்கள் குவித்தார். கேப்ட்னசியிலும் சிறப்பாக செயல்பட்டார்'' என்றார்.
சுப்மன் கில்லுக்கு முன்னாள் வீரர் பாராட்டு
தொடர்ந்து பேசிய முகமது கைஃப், ''இளம் வீரர்களைக் கொண்ட அணியுடன் ஒரு தொடருக்குச் செல்லும்போது, பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு, கேப்டனாகவும் திறம்பட வழிநடத்த வேண்டும். சுப்மன் கில் இந்த இரண்டையும் இங்கிலாந்து தொடரில் வெற்றிகரமாகச் செய்துள்ளார். எனவே அவர் ஓடிஐயிலும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளார்'' என்று கூறியுள்ளார்.