- Home
- டெக்னாலஜி
- ஃபிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை! எந்தெந்த போன்களுக்கு பாதிக்கு பாதி விலை குறைப்பு? முழு லிஸ்ட்!
ஃபிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை! எந்தெந்த போன்களுக்கு பாதிக்கு பாதி விலை குறைப்பு? முழு லிஸ்ட்!
ஃபிளிப்கார்ட்டில் சுதந்திர தின விற்பனை தொடங்கியுள்ளது. எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கும்? கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் உண்டா? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Flipkart Independence Day Special Sale
இந்தியாவில் ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் முன்னணியில் உள்ளன. ஃபிளிப்கார்ட் நிறுவனம் பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு விற்பனை அறிவித்து மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மற்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ஃபிளிப்கார்ட்டில் சுதந்திர தின சிறப்பு விற்பனை (Flipkart Independence Day Sale 2025) ஆகஸ்ட் 13ம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது.
ஃபிளிப்கார்ட்டில் சுதந்திர தின சிறப்பு விற்பனை
ஃபிளிப்கார்ட்டில் FREEDOM SALE என்ற பெயரில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி, விவோ, மோட்டோரோலா போன்ற பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகின்றன. vivo t4x 5G ஸ்மார்ட்போன் ரூ.13,400 ல் இருந்து தொடங்குகிறது. galaxy f56 ஸ்மார்ட்போன் ரூ.15,000 ல் இருந்து தொடங்குகிறது. galaxy a35 5G போன் ரூ.19,999 என்ற விலையில் இருந்து தொடங்குகிறது.
ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்களுக்கு தள்ளுபடி
மேலும் galaxy f36 5G போன் விலை ரூ.13,000ல் இருநதும் தொடங்குகிறது. இதேபோல் ஐபோன்களுக்கும் அதிரடி தள்ளுபடி கிடைக்கும். இது தவிர முன்னணி பிராண்ட்களின் ஸ்மார்ட்வாட்ச்கள் பாதிக்கு பாதி விலையில் கிடைக்கும். போல்ட் ஸ்மார்ட்வாட்ச் ரூ.1,999 என்ற விலையில் இருந்து தொடங்குகிறது. இதுமட்டுமின்றி லேப்டாப்கள், டேப்லெட்டுகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற கேட்ஜெட்டுகளும் அதிரடி தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
வாஷிங்மெஷின்கள், ஏசிகளுக்கு அதிரடி தள்ளுபடி
மேலும் குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் பிற பெரிய வீட்டு உபயோகப் பொருட்களையும், ஆடைகள், காலணிகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்களையும் குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் உணவுப் பொருட்கள், ஸ்வீட்ஸ்கள் ஆகியவற்றையும் மிக குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.
எந்தெந்த கிரெட் கார்டுகளுக்கு தள்ளுபடி?
ஃபிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் பல்வேறு வங்கிகளில் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். கனரா வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறலாம். மேலும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ்களும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி பெற Flipkart Plus Super Coins ஐயும் பயன்படுத்திக் கொள்ளலாம்.