flipkart: ccpa: தரமற்ற பிரஷர் குக்கர்கள் விற்பனை: ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதித்த சிசிபிஏ
தரமற்ற பிரஷர் குக்கர்களை தங்களின் தளத்தில் விற்பனை செய்ய அனுமதித்த ஃபிளிப்கார்ட் நிறுவனம்,விதிகளை மீறியதற்காக ரூ.ஒருலட்சம் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ) உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற பிரஷர் குக்கர்களை தங்களின் தளத்தில் விற்பனை செய்ய அனுமதித்த ஃபிளிப்கார்ட் நிறுவனம்,விதிகளை மீறியதற்காக ரூ.ஒருலட்சம் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ) உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றமா? ரயில்வே துறை விளக்கம்
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் நிதி காரே வெளியிட்ட உத்தரவில், “ ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது தளத்தில் விற்பனை செய்த 598 தரமற்ற பிரஷர் குக்கர்களை திரும்பப்பெற்று, நுகர்வோர்களுக்கு பணத்தை ஒப்படைத்து அடுத்த 45 நாட்களுக்குள் அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும்.
இந்த தரமற்ற குக்கர்களைவிற்க அனுமதித்த ஃபிளிப்கார்ட் நிறுவனம் நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காக ரூ.ஒருலட்சம் அபராதமாகச் செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
தங்கம் விலை தொடர் சரிவு! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.500 வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?
மேலும், “ பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.1,84,263 சம்பாதித்துள்ளது. வர்த்தகரீதியாக இந்த பிரஷர் குக்கர்களை ஃபிளிப்கார்ட் நிறுவனம் விற்றுள்ளதால், அதன் பொறுப்பையும், பங்களிப்பையும் நிராகரிக்க முடியாது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரஷர் குக்கர்கள் ஐஎஸ்2347:2017 சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இது கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
‘மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போறேன்’: நெட்டிஸன்களை குழப்பிய எலான் மஸ்க்
மக்களிடத்தில் தரமற்ற பொருட்கள், போலியானது குறித்து விழிப்புணர்வு ஊட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தொடரந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின்போது, தரமற்ற 1,088 ஹெல்மெட், 1435 பிரஷர் குக்கர்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.