Asianet News TamilAsianet News Tamil

elon musk: Manchester United F.C ‘மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போறேன்’: நெட்டிஸன்களை குழப்பிய எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக இங்கிலாந்தைச்சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்கப்போவதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளது நெட்டிஸன்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Elon Musk Tweets, "I'm Buying Manchester United," Confusing the Internet
Author
First Published Aug 17, 2022, 9:29 AM IST

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக இங்கிலாந்தைச்சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்கப்போவதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளது நெட்டிஸன்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப் போகிறேன் என்று எலான் மஸ்க் கூறியவுடன் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் எந்த அளவுக்கு உயர்ந்தது, அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக மஸ்க் அறிவித்தவுடன் ட்விட்டர் பங்குகள் சரிந்தது குறித்தும் தெரியும். 

Elon Musk Tweets, "I'm Buying Manchester United," Confusing the Internet

ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் மரணமும் 400 கோடி டாலர் பங்குகளும்: அடுத்தது என்ன?

விளைவுகள் அறியாமல் எலான் மஸ்க் ஏன் இப்படி பேசுகிறார் என நெட்டிஸன்கள் தெரிவித்துள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டர் மான்செஸ்டர் யுனைடெட் அணியையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ தெளிவாகச் சொல்கிறேன். குடியரசுக் கட்சியின் இடது பகுதியையும், ஜனநாயகக் கட்சியின் வலது பகுதியையும் ஆதரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் எலான் மஸ்க் பதிவிட்ட ட்விட்டர் கருத்தில் “ நான் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்கப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் அணி கடந்த சில ஆண்டுகளாக மோசமாக விளையாடியதையடுத்து, அணியின் உரிமையாளராக இருந்த அமெரிக்காவைச் சேர்ந்த கிளேசர் குடும்பத்தினர் வெளியேற ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச்சூழலில் எலான் மஸ்க் ட்விட்டர் கருத்து ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Elon Musk Tweets, "I'm Buying Manchester United," Confusing the Internet

இப்படித்தான் டோமினோஸ் பீட்ஸா தயாரிக்கிறாங்களா! ருசியின் ரகசியம் இதுவா

நெட்டிஸன்களில் ஒருவர் எலான் மஸ்கிடம் “ உண்மையாகவே நீங்கள் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறீர்களா அல்லது முட்டாள்தனமாகப் பேசுகிறீர்களா” எனக் கேட்டுள்ளார்.
நெட்டிஸன்களில் ஒருவர் மஸ்கிடம், “ இந்த மனிதர் பேச்சை நம்பாதீர்கள். 4400 கோடி டாலருக்கு ட்விட்டரை வாங்கப் போவதாகக் கூறி எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டு, வழக்கை எதிர்கொண்டு வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Elon Musk Tweets, "I'm Buying Manchester United," Confusing the Internet

அதானி குழுமம், ரூ.835 கோடிக்கு நவ்கரின் கன்டெய்னர் டெப்போவை விலைக்கு வாங்குகிறது

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக  எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்தநிலையில் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக திடீரென அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த ட்விட்டர் நிறுவனம், எலான் மஸ்கிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios