- Home
- Astrology
- Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்த பெண்ணை கல்யாணம் பண்ணா பண விஷயத்துல கஷ்டபட வேண்டாம்!!
Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்த பெண்ணை கல்யாணம் பண்ணா பண விஷயத்துல கஷ்டபட வேண்டாம்!!
எண் கணிதத்தின் படி, எந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்கள் கணவருக்கு பண விஷயத்தில் ஆதரவாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.

Numerology
இந்து மதத்தில் ஒவ்வொருவருக்கும் அவரது ராசி மற்றும் கிரகங்களின் நிலைதான் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. அதுபோல தான் ஒருவரது பிறந்த தேதியும் அவரது குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை, ஆளுமை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை தான் எண் கணிதம் என்று சொல்லுவார்கள். எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு கிளை ஆகும்.
எண் கணிதத்தில், 1 முதல் 9 வரையிலான எண்கள் இருக்கிறது. தொடர்புடையது. கிரகங்களின் அடிப்படையில் அந்த தேதியில் பிறந்தவர்களுக்கு செல்வம், செழிப்பு, காதல் போன்றவை அமையும். அந்த வகையில் எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது கணவருக்கு பண விஷயத்தில் ரொம்பவே ஆதரவாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அது எந்தெந்த தேதிகள் என்று இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
எண் 6
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு மூல எண் 6 தான். இந்த எண் சுக்கிரனுடன் தொடர்புடையது. ஆகையால் சுக்கிரனின் அருளால் இந்த தேதியில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள். முக்கியமாக இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது கணவருக்கு அதிர்ஷ்டசாலியாக கருதப்படுவார்கள். இவர்கள் பண விஷயத்தில் கணவருக்கு ரொம்பவே ஆதரவாக இருப்பார்களாம்.
பணத்தை செலவழிக்க தயங்கமாட்டார்கள்
எண் கணிதத்தின் படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணத்தை செலவழிக்க ஒருபோதும் தயங்கவே மாட்டார்கள். தாராளமாக பணத்தை செலவழிப்பார்கள். ஆனால் இவர்களது கையில் அதிகமாக தான் பணம் புரளும். மேலும் இந்த தேதியில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை இனிமையாகவே இருக்கும். இவர்கள் நிறைய பயணம் செய்ய விரும்புவதால் பல இடங்களுக்கு செல்வார்கள்.
திருமண வாழ்க்கை
எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்த பெண்கள் சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப்படும் குணமுடையவர்கள். சின்ன விஷயம் சொன்னால் கூட உடனே உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். மேலும் இந்த செய்திகளில் பிறந்த பெண்கள் திருமணத்திற்கு பிறகும் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் முக்கியமாக இவர்கள் தங்களது கணவருக்கு எல்லா விஷயத்திலும் ஆதரவாக இருப்பார்கள்.
இந்த தேதியில் பிறந்த பெண்கள் தனது கணவரின் குடும்பத்தை நன்றாக நடத்துவார்கள் அவர்களை தன்னுடனே வைத்து கொள்ள விரும்புவார்கள். சொல்லப்போனால் இவர்கள் தங்கள் கணவரின் குடும்பத்திற்கு அதிர்ஷ்டசாலியாக கருதப்படுவார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்கள் ரொம்பவே அன்பாகவும் அமைதியாகவும் இருக்க குணம் கொண்டவராகவும் இருப்பார்கள். கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தாரின் தேவைகளை எப்போதுமே பூர்த்தி செய்ய தங்களால் முடிந்த அளவு முயற்சி செய்வார்கள்.