- Home
- Astrology
- Birth Date : இது உங்க பிறந்த தேதியா? அப்ப நீங்க ரொம்ப லக்கி! கல்யாணம் ஆச்சுனா டாப்புக்கு போய்டுவீங்க
Birth Date : இது உங்க பிறந்த தேதியா? அப்ப நீங்க ரொம்ப லக்கி! கல்யாணம் ஆச்சுனா டாப்புக்கு போய்டுவீங்க
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Lucky Birth Dates That Attract Good Fortune After Marriage
எண் கணிதம் என்பது ஒருவரது பிறந்த தேதியை வைத்து அந்த நபரின் குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும் எண் கணிதத்தின் படி, ஒருவருடைய பிறந்த தேதியை பொறுத்து அவர்களது வாழ்க்கையில் அவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கை மாறிவிடும் என கூறப்படுகிறது. அதாவது திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கையானது ரொம்பவே மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்று எண் கணிதம் சொல்லுகின்றது. அது எந்தெந்த தேதிகள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 6
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 6 இன் கீழ் வருவார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்களது வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் இந்த தேதிகளில் பிறந்தவர்களை சுக்கிரன் ஆளுவதால் சுக்கிர பகவானின் ஆசீர்வாதம் இவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இவர்கள் திருமணத்திற்கு பிறகு பண யோகத்தை பெறுவார்கள். தொழில் ரீதியாக பெரிய முன்னேற்றத்தை காண்பார்கள். மக்கள் மத்தியில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
எண் 8
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 8, 11 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 8 இன் கீழ் வருவார்கள். இவர்களை ஆளுபவர் சனி பகவான். எனவே சனி பகவானின் ஆசீர்வாதம் இவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே அடம்பிடிக்கக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் கடின உழைப்பாளிகள். இதன் காரணமாக சனி பகவானின் ஆசிர்வாதம் எப்போதுமே இவர்களுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்கு பிறகு இவர்களது கடின உழைப்பால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள் என்றும் எண் கணிதம் கூறுகிறது.
எண் 9
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 9 இன் கீழ் வருவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களை செவ்வாய் பகவான் ஆளுவதால் திருமணத்திற்கு பிறகு இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் செவ்வாய் பகவானின் ஆசீர்வாதம் எப்போதுமே இவர்களுக்கு நிறைந்து இருக்கும். இதனால் இவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் எப்போதுமே அதிகமாகவே இருக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு தங்களது வாழ்க்கை துணையின் ஆதரவால் மிகப்பெரிய செழிப்பை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் ரீதியாக பெரிய முன்னேற்றத்தை காண்பார்கள். நிதி ரீதியாகவும் நல்ல வளர்ச்சி இருக்கும் என்று என் கணிதம் கூறுகிறது.