Birth Date : இந்த 3 தேதிகளில் பிறந்தவங்க ரொம்ப பாவம்.. காதல்ல ஏமாறுவாங்க!!
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் ஏமாறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பட்டியலில் உங்க பிறந்த தேதி இருக்கிறதா?
Numerology and Love Failure
எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரின் ஆளுமை, எதிர்காலம், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை கணித்துவிடலாம். அதுமட்டுமின்றி ஜோதிடத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு ராசி மற்றும் அதனுடன் தொடர்புடைய கிரகம் இருப்பது போல, பிறந்த தேதிக்கும் ரேடிக்ஸ் எண்கள் அல்லது மூல எண்கள் மற்றும் அதனுடன் கிரகமும் இருக்கும்.
மூல எண்கள் என்றால் என்ன?
ஒரு நபரின் பிறந்த தேதியுடன் மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டினால் வரும் எண் தான் மூல எண் அல்லது ரேடிக்ஸ் எண்கள் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 5 ஆகும். இந்த எண்ணின் அதிபதி புதன் கிரகமாகும். எனவே இந்த தேதிகளில் புதனின் ஆட்சியால் ரொமவே புத்திசாலிகளாக இருப்பார்கள். மேலும் இவர்கள் வணிகத்தில் நிறைய முன்னேற்றத்தை காண்பார்கள். ஆனாலும் சில சமயங்களில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. குறிப்பாக, இவர்கள் காதலில் ஏமாறுவார்கள். இது தொடர்பான முழு விளக்கத்தை இப்போது இந்த பதிவை காணலாம்.
எண் 5
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் எண் 5ல் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள், செய்யும் வேலையில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். ஆனால் காதலில் இவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள்.
எண் 14
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் எண் 14ல் பிறந்தவர்கள் வணிகத்தில் வெற்றியை காண்பார்கள் மற்றும் கனவுகள் அனைத்தும் நனவாகும். ஆனால் காதல் என்று பார்க்கும்போது இவர்கள் அதில் ஏமாற வாய்ப்பு அதிகம் உள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு தான் உண்மையான அன்பை காண்பார்கள்.
எண் 23
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் எண் 23ல் பிறந்தவர்கள் கவர்ச்சியான ஆளுமை உள்ளவர்கள். வேலைகளில் லகுவாக செய்து முடிப்பார்கள். ஆனால் உண்மையான காதலை தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். அது அவர்களுக்கு கிடைக்காமல் போகும்.