Birth Date : இந்த தேதிலயா பிறந்தீங்க? ஐயோ! அப்ப காதல்ல போராடிதான் ஜெயிக்கனும்
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் உண்மையாகவும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள் என்று சொல்லப்படுகிறது.

எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு கிளை. இந்துக்களின் நம்பிக்கை. எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியின் அடிப்படையில் அவரது எதிர்காலம், ஆளுமை, குணாதிசயங்கள் போன்றவை கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் ரொம்பவே உண்மையாக இருப்பார்களாம். அவர்கள் காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்களாம். அதுவும் குறிப்பாக, காதலில் ஜெயிக்க எதை வேண்டுமானாலும் அவர்கள் எதிர்ப்பார்கள் என்று எண் கணிதம் சொல்லுகிறது. அது என்னென்ன தேதிகள் என்று இப்போது இந்த பதிவில் காணலாம்.
எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண் 2 ஆகும். இவர்கள் இயல்பாகவே ரொம்பவே திறமையானவர்களாக இருப்பார்களாம்.
இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் தான் காதலில் ரொம்பவே அர்ப்பணிப்பாக இருப்பார்களாம். இவர்கள் காதல் உறவில் மிக தீவிரமாக இருப்பதால், அதை ஜெயிப்பதற்காக எதை வேண்டுமானாலும் எதிர்க்க துணிவார்களாம்.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் காதலிக்கும் நபரை முழு மனதுடன் நேசிப்பார்களாம். அவர்களுக்காக யாருடனும் சண்டை போட தயங்க மாட்டார்கள். தயாராக இருப்பார்களாம்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் ஏதோ ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் ஓய மாட்டார்களாம். இவர்கள் காதலில் மட்டுமல்ல, மற்ற உறவுகளிலும் நம்பகமானவர்களாக இருப்பார்களாம்.