சிறுவயதிலேயே முடி உதிர்தலுக்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
தற்போது முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சினையாகி விட்டது. அதுவும் குறிப்பாக இளம் வயதிலேயே முடி உதிர்தலால் பலரும் அவதிப்படுகிறார்கள். ஆனால் உங்களுக்கு 20 வயதிலேயே முடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறது என்றால் அதை கவலைக்குரிய விஷயம். இதற்கு பின்னால் சில ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது மருத்துவ நிலைகள் இருக்கலாம். இது குறித்து நீங்கள் அஞ்ச வேண்டாம். முடி உதிர்தலுக்கான காரணத்தை கண்டறிந்து முடி உதிர்தலை கட்டுப்படுத்திவிடலாம். சரி இப்போது இந்த பதிவில் இளம் வயதிலேயே முடி உதிர்தலுக்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
சிறு வயதில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் :
1. மன அழுத்தம்
இந்த நவீன காலத்துல பரபரப்பான வாழ்க்கை முறையால் நாம் எல்லோரும் ஏதாவது ஒரு விஷயத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். இதன் விளைவாக உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகரித்து முடி வளர்ச்சி சுழற்சியில் மோசமான விளைவு ஏற்படுத்திவிடுகிறது. இதன் காரணமாக தான் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.
2. ஆரோக்கியமற்ற உணவு முறை :
தலைமுடி ஆரோக்கியத்திற்கு புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் பி, வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். நீங்கள் சாப்பிடும் உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் இல்லையெனில் உங்களது தலைமுடி பலவீனமடைந்து உடைய ஆரம்பிக்கும். எனவே, நீங்கள் ஆரோக்கியமான கூந்தலை பெற விரும்பினால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குப்பை உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் இவை முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
3. மரபணு காரணம்
உங்களது குடும்பத்தில் யாருக்காவது வழுக்கை பிரச்சினை இருந்தால் உங்களுக்கும் வர வாய்ப்பு அதிகமுள்ளன. மரபணு ரீதியாக ஏற்படும் இந்த பிரச்சனை ஆண், பெண் என இருவருக்கும் ஏற்படும்.
4. ஹார்மோன் சமநிலையின்மை
PCOS போன்ற பிற ஹார்மோன் பிரச்சனை காரணமாக முடி உதிர்தல் ஏற்படும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் சமநிலை இன்னைக்கு காரணமாக முடி உதிரும்.
5. அதிக ரசாயனங்களின் பயன்பாடு :
ஷாம்பு, ஹேர் ஜெல், ஹேர் கலர், ஸ்ட்ரைட்டனிங், கர்லிங் சிகிச்சை போன்றவற்றின் அதிக பயன்பாடு காரணமாகவும் முடியின் வேர்கள் பலவீனமடைந்து முடி உதிர்தல், முடி வறட்சியை ஏற்படுத்துகிறது.
6. நீரிழிப்பு
உங்களது உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லை என்றால் முடி வறண்டு போகும் மற்றும் உடையும். எனவே தினமும் சுமார் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடி ஆரோக்கியமாக இருக்கும்.
7. தூக்கமின்மை
முடி உதிர்தலுக்கு தூக்குமின்மையும் காரணமா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் தினமும் சரியாக தூங்கவில்லை என்றால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குங்கள்.
8. பொடுகு தொல்லை
பொடுகு தொல்லை, பூஞ்சை தொற்று மற்றும் உச்சந்தலையை சுத்தமாக வைக்காதது போன்றவற்றாலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.
9. புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூட முடியும் ஆரோக்கியத்தை பாதிக்கும். இவை இரண்டும் ரத்த ஓட்டத்தை குறைத்து முடியும் வேர்களை பலவீனப்படுத்தும். இதனால் முடி உதிரத் தொடங்கும்.
10. மருந்துகளின் பக்க விளைவு
சில சமயங்களில் சில மருந்துகளின் காரணமாகவும் முடி உதிர்தல் ஏற்படும்.
