Hair Fall : முடி ரொம்ப உதிருதா? இந்த 2 பொருள் போதும்! இனி உதிராது
உங்களது தலை முடி அதிகமாக உதிர்கிறது என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். முடி உதிர்தல் பிரச்சனை இனி இருக்காது.

தற்போது பலரும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் பல காரணங்களால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. முடி உதிர்தலுக்கு சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, உடல்நல பிரச்சனைகள், மாசுபாடு, இரசாயன பொருட்களின் பயன்பாடு, பொடுகு தொல்லை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 பொருட்களை பயன்படுத்தி முடி உதிர்தல் பிரச்சனையை குறைத்து விடலாம் தெரியுமா? அவை என்ன? அவற்றை பயன்படுத்துவது எப்படி என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முடிக்கு அரிசி நீர் :
அரிசி நீரில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், அவை முடி உதிதலை தடுத்து முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும். அதுமட்டுமல்லாமல் முடியை பட்டு போல மென்மையாக மாற்றும். ஆனால் அரிசி முடிவுடன் நீங்கள் வெந்தயத்தை பயன்படுத்தினால் கூந்தல் ஆரோக்கியமாகவும் மாறும் மற்றும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். இப்போது அரிசி நீர் மற்றும் வெந்தயத்தை கூந்தலுக்கு பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
அரசி நீர் மற்றும் வெந்தயம் :
சிறிதளவு அரிசி மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து விட்டுவிட்டு பிறகு மறுநாள் காலை வெந்தயத்தை மட்டும் பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அரிசியில் இருந்து நீரை மட்டும் எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரைத்து வைத்த வெந்தயத்தை சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இப்போது அதை வடிகட்டிக் கொள்ளுங்கள். இல்லையெனில் கெட்டியாகிவிடும்.
வடிகட்டிய இதனுடன் வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். இப்போது இந்த கலவையை உச்சந்தலையில் தடவி பத்து நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இப்படி செய்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நின்றுவிடும். மேலும் முடி அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும். பொடுகு பிரச்சனை முற்றிலும் நீங்கிவிடும்.