நெல்லையில் கவின் ஆணவக்கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Surjith Rrelative Arrested In Kavin Honor Killing Case: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கவினும், திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். அப்பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வந்த நிலையில், காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரரின் சுர்ஜித் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐடி ஊழியர் கவினை வெட்டி படுகொலை செய்தார்.
நெல்லை கவின் ஆணவப் படுகொலை
சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்பு சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். தனது மகனின் சாவுக்கு துணைபோன சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என கவினின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். பல அரசியல் தலைவர்கள் கவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனி சட்டம்
திமுக எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கவினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் கவினின் குடும்பத்துக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார். ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
சுர்ஜித்தின் உறவினர் கைது
இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிண்றனர். கொலையாளி சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் கொலை நடந்த இடத்துக்கும் போலீசார் சுர்ஜித்தை அழைத்து சென்றனர். இந்நிலையில், கவின் கொலை வழக்கில் 3வதாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற காவலில் அடைப்பு
கவினை கொலை செய்ய சுர்ஜித்துக்கு கவின் உதவியதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விசாரணைக்கு பிறகு சுர்ஜித்தையும், சரவணனையும் மற்றும் ஜெயபாலனையும் போலீசார் இன்று நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் மூன்று பேரையும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
