இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:58 PM (IST) Oct 11
Top 10 Indian States இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட் 2025-ன் படி, பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையை உருவாக்க சிறந்த டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல். ஆந்திரா, கேரளா முன்னிலை.
11:02 PM (IST) Oct 11
Shubman Gill: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்தார். அப்போது, 'ஐ லவ் யூ சுப்மன்' என்று கூறி ரசிகை ஒருவர் காதல் பிரபோசல் செய்தது வைரலாகி வருகிறது.
10:38 PM (IST) Oct 11
பண்டிகை காலத்தில் தனிநபர் கடன் வாங்க விரும்புகிறீர்கள், ஆனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் 600-க்கும் குறைவாக உள்ளதா? கவலைப்படத் தேவையில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நம்பகமான கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் எளிதாகக் கடன் பெறலாம்.
10:29 PM (IST) Oct 11
EPF Contribution Stop Effects: உங்கள் PF ஒரு சேமிப்புக் கணக்கு மட்டுமல்ல, ஓய்வூதியத்திற்கான நீண்ட கால முதலீடும். ஆனால், EPF பங்களிப்பை நிறுத்தினால் என்ன நடக்கும்? கணக்கு எப்போது செயலிழக்கும், வரி எப்படி விதிக்கப்படும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
10:23 PM (IST) Oct 11
Ind Vs Aus: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீசுவதை இந்திய பந்துவீச்சாளர்கள் விரும்புகிறார்கள். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை குவித்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களைப் பற்றி பார்ப்போம்.
10:07 PM (IST) Oct 11
எச்.ராஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்பட வசனத்தைக் குறிப்பிட்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன் திரைப்படத்தில் மட்டும் தான் இப்படி பேச முடியும் வெளியே வந்து பேசி பாரு என கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
09:42 PM (IST) Oct 11
Satcom Launch செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் பற்றி எந்தப் பரிந்துரையும் நிலுவையில் இல்லை என TRAI மறுக்கிறது. இந்த மோதலால் ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் இணையச் சேவைகள் இந்தியாவில் தொடங்குவது தாமதமாகிறது.
09:33 PM (IST) Oct 11
iPhone 16 ஃபிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 16-ஐ ₹35,000-க்கும் குறைவான விலையில் வாங்குங்கள்! எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கிச் சலுகைகளைப் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
09:19 PM (IST) Oct 11
Diwali Sales Scam தீபாவளி விற்பனை காலத்தில் விழிப்புடன் இருங்கள்! ஆன்லைன் மோசடிகள், போலியான இணைப்புகள் மற்றும் நிதி மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் அத்தியாவசிய குறிப்புகளை அறிக.
08:36 PM (IST) Oct 11
MicEMouse அதிர்ச்சியூட்டும் ஆய்வில், கம்ப்யூட்டர் மவுஸ் ஒட்டுக் கேட்கும் 'மைக்-இ-மவுஸ்' ஹேக்கிங் முறை அம்பலம். தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்டு மோசடிக்கு வழிவகுக்கும் இந்த ஆபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என அறியுங்கள்.
08:25 PM (IST) Oct 11
ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-வாக இருந்தும் திமுக அரசைத் தாக்குவது தவறு" எனக் கூறுகிறது அறிவாலயம். விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வேல்முருகனின் செயல்பாடுகளை அதிர்ச்சியாக என விமர்சித்துள்ளனர்.
08:21 PM (IST) Oct 11
UPI Payments Google Pay, PhonePe-க்கு வேலை இல்லையா? ChatGPT மூலம் UPI பேமெண்ட்! மேலும், PIN இல்லாமல் Biometric பேமெண்ட் வசதி அறிமுகம். Google Pay, PhonePe-க்கு வேலை இல்லையா? ChatGPT மூலம் UPI பேமெண்ட்! மேலும், PIN இல்லாமல் Biometric பேமெண்ட் .
08:07 PM (IST) Oct 11
வேலூரில் கிராமசபைக் கூட்டத்தில், கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாகினர் விஜய் சென்றுவிட்டார் என MP கதிர் ஆனந்த் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், கிராம சபைக் கூட்டத்தில் உள்ளூர் பிரச்சினையை பேசுங்கள் என எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.
07:49 PM (IST) Oct 11
Google Pixel 9: Flipkart தீபாவளி விற்பனையில் Google Pixel 9 விலை அதிரடி குறைப்பு! எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ. 38,500-க்கு ஃபிளாக்ஷிப் போன். விவரங்கள் இங்கே.
07:45 PM (IST) Oct 11
விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டிய நோக்கம் என்ன தெரியுமா? உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினாரா? அல்லது நமக்கு ஒரு கனவு, முதலமைச்சராகி இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கினாரா?
07:43 PM (IST) Oct 11
சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக தலைவர் திருமாவளவனின் கார் மறிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது சந்தேகம் நியாயமானது, திருமாவின் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
07:39 PM (IST) Oct 11
Flipkart Big Diwali Sale Flipkart பிக் தீபாவளி விற்பனையில் ₹15,000-க்கு குறைவான சிறந்த ஸ்மார்ட்போன் டீல்களைப் பெறுங்கள்! Samsung, Realme, Motorola, CMF சலுகைகளைப் பாருங்கள்.
07:08 PM (IST) Oct 11
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு ஏதாவது ஆச்சு என்றால் சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்துள்ள அன்புமணி தான் ராமதாஸ்ன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொந்தரவு என பாமக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
06:40 PM (IST) Oct 11
ராமதாஸ் மீது அண்மைக் காலமாக திருமாவளவன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராமதாசை எல்லோரும் நேரில் போய் நலம் விசாரித்தனர். ஆனால், திருமாவளவன் மட்டும் நேரில் சென்று நலம் விசாரிக்காமல் தொலைபேசி மூலமாக விசாரித்தார்.
06:13 PM (IST) Oct 11
TN Grama Panchayat Secretary ஊரக வளர்ச்சி துறையில் 1483 கிராம ஊராட்சி செயலாளர் காலியிடங்கள். 10ம் வகுப்பு தேர்ச்சி, சம்பளம் Rs.15,900-50,400. நேர்காணல் மட்டுமே! கடைசி தேதி 09.11.2025.
06:08 PM (IST) Oct 11
அளவுக்கு அதிகமாக வெந்நீர் குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
05:25 PM (IST) Oct 11
விஜயின் ஜனநாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்தும் நடித்து வருவதால் ஜனநாயகன் திரைப்படத்துக்கும், கரூருக்கு வந்த கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் அந்த படத்திற்காக ட்ரோன் கேமராவில் படப்பிடிப்பு நடத்தினார்களா?
04:42 PM (IST) Oct 11
முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி என யாரும் இல்லாமல் அனைத்து கட்சி நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
04:40 PM (IST) Oct 11
நடிகர் விஜய், அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகி உள்ள நிலையில், அவரது இடத்தை யார் நிரப்புவார்கள் என்கிற கேள்விக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் பதில் அளித்து உள்ளார்.
04:31 PM (IST) Oct 11
கரூர் போன்று இன்னும் 2 நிகழ்ச்சிகள் நடந்துவிட்டால் விஜய் தாமாகவே அரசியலை விட்டு ஓடிவிடுவார் அவரை யாரும் துரத்த வேண்டியதில்லை என மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் விமர்சித்துள்ளார்.
04:19 PM (IST) Oct 11
எந்த காலத்திலும் திராவிட, இந்திய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என இயேசு மேல் ஆணையாகக் கூறிய சீமான், 2026 தேர்தலிலும் தனித்து நிற்போம் என உறுதியளித்தார்.
04:03 PM (IST) Oct 11
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்கள் பான் இந்தியா அளவில் கலக்கி வரும் நிலையில், தமிழ் சினிமா தடுமாறுவதைப் பற்றி தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார் டி.ஆர்.
03:44 PM (IST) Oct 11
குழந்தைகள் அதிகம் மண் சாப்பிட சில காரணங்கள் இருக்கின்றன. அதை சரி செய்தால் அவர்கள் மண் சாப்பிடுவதை நிறுத்திவிடுவார்கள்.
03:41 PM (IST) Oct 11
எடப்பாடி பழனிச்சாமி பேசும் இடங்களில் எல்லாம் தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக வந்து கலந்து கொள்கிறார்கள். எங்கள் கட்சி மற்ற கட்சி கொடியைத் தூக்கும் அளவுக்கு அப்படி தரம் தாழ்ந்து போகிற கட்சியே கிடையாது.
03:36 PM (IST) Oct 11
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
03:32 PM (IST) Oct 11
கட்டுமானத் தொழிலாளி தேவேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், அவரது மனைவி கலைவாணிக்கும் அருண்குமார் என்பவருக்கும் இருந்த கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அருண்குமார் தேவேந்திரனை அடித்துக் கொன்றது தெரியவந்தது.
02:50 PM (IST) Oct 11
Krishnagiri Accident: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய முதன்மை காவலர் ரமாமணி, ஸ்கூட்டியில் சென்றபோது அதிவேகமாக வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
02:47 PM (IST) Oct 11
IND vs WI: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சுப்மன் கில் சதம் அடித்து 3 சாதனைகளை படைத்துள்ளார்.
02:38 PM (IST) Oct 11
தாடி வேகமாக வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
02:37 PM (IST) Oct 11
‘கல்கி 2898 AD’ படத்தில் சுமதி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவருக்கு பதிலாக நடிக்க உள்ள நாயகி பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.
02:35 PM (IST) Oct 11
தனி நீதிபதி எப்படி இதை விசாரித்தார்? இந்த வழக்கு அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை மட்டுமே விவாதித்து இருக்க வேண்டும். இது அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுப்பது சம்பந்தமான வழக்கு.
02:12 PM (IST) Oct 11
Social work jobs : தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிகளுக்கு தகுதியுள்ள உள்ளூர் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மைய நிர்வாகி, ஆலோசகர், வழக்கு பணியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
01:58 PM (IST) Oct 11
கூலி படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டிய நடிகர் நாகார்ஜுனா, அடுத்ததாக தான் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் முன்னாள் காதலி உடன் ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது.
01:57 PM (IST) Oct 11
விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர, எடப்பாடி பழனிசாமி பாஜகவை கழட்டிவிடவும் தயங்கமாட்டார் என்றும், இந்த பலவீனமான கூட்டணி 15% வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
01:53 PM (IST) Oct 11
Magalir Urimai Thogai: 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் வாக்குறுதி அளிப்பதாகவும், தகுதியுள்ள மகளிருக்கு வழங்கப்படாத நிலுவைத் தொகையான ரூ.30,000 எப்போது வழங்கப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.