- Home
- Tamil Nadu News
- என் புருஷன் இருக்குற வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது! தாலி போனாலும் பரவால்ல நீ தான் வேணும் சொன்ன கலைவாணி!
என் புருஷன் இருக்குற வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது! தாலி போனாலும் பரவால்ல நீ தான் வேணும் சொன்ன கலைவாணி!
கட்டுமானத் தொழிலாளி தேவேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், அவரது மனைவி கலைவாணிக்கும் அருண்குமார் என்பவருக்கும் இருந்த கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அருண்குமார் தேவேந்திரனை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

கட்டுமானத் தொழிலாளி தேவேந்திரன்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஊனை வெங்கடசாமிரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (35). கட்டுமானத் தொழிலாளி. இவரது காதல் மனைவி கலைவாணி (30). இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொந்தியம் தோப்புப் பகுதியில் தலையில் படுகாயங்களுடன் தேவேந்திரன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
கள்ளக்காதல்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தேவேந்திரன் உடலை மீட்டு பிரேத பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடைபெற்றது தெரியவந்தது.
காதல் மனைவி கலைவாணி
இதுபற்றி தேவேந்திரனின் மனைவி கலைவாணியிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் கிடுக்குப்பிடி விசாரணையில் கள்ளக்காதலன் அருண்குமார் தேவேந்திரனை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அருண்குமார் வாக்குமூலம்
அப்போது அருண்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்: நான், தேவேந்திரன், கலைவாணி ஆகிய மூன்று பேரும் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு ஷு கம்பெனியில் வேலை பார்த்து வந்தோம். அப்போது எனக்கும் கலைவாணிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் தேவேந்திரனுக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்தது மட்டுமல்லாமல் அடிக்கடி அடித்துள்ளார். எனவே எங்களுக்கு இடையூறாக இருந்து வந்தார். தேவேந்திரனை மதுகுடிக்க அழைத்து பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்தேன் என்று கூறினார். கலைவாணி மற்றும் அருண்குமார் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.