முன்னாள் காதலியுடன் மீண்டும் ரொமான்ஸ் செய்ய ரெடியாகும் நாகார்ஜுனா? 100வது பட அப்டேட் இதோ
கூலி படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டிய நடிகர் நாகார்ஜுனா, அடுத்ததாக தான் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் முன்னாள் காதலி உடன் ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது.

Nagarjuna Next Movie Heroine
தெலுங்கு திரையுலகில் ஸ்டைலிஷ் மன்மதனாக வலம் வரும் நாகார்ஜுனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கிரேஸ் உள்ளது. 66 வயதிலும் இளம் ஹீரோக்களுக்குப் போட்டியாக ஃபிட்டாக இருக்கிறார். நாகார்ஜுனாவுடன் நடிக்க நடிகைகள் போட்டி போடுவார்கள். தற்போது நடிகர் நாகார்ஜுனா தனது 100வது படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை அவரே தயாரிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு எளிமையாக தொடங்கியது. இப்படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பதை பற்றிய தகவல் கசிந்துள்ளது.
நாகார்ஜுனா - தபு ஜோடி
நாகார்ஜுனா தனது 100வது படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்குகிறார். ஸ்கிரிப்ட் முதல் நட்சத்திரங்கள் வரை அனைத்திலும் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாகார்ஜுனா-தபு ஜோடிக்கு ரொமான்டிக் கப்பிள் என்ற பெயர் உண்டு. 'நின்னே பெல்லாடா', 'ஆவிடா மா ஆவிடே' போன்ற படங்களில் இவர்களின் கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
மீண்டும் இணையும் ஜோடி
நாகார்ஜுனா ஹீரோவாக நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே 100வது படத்தை வெற்றிப் படமாக்க முயற்சிக்கிறார். தபுவுடன் நடித்த படங்கள் ஹிட்டானதால், அந்த சென்டிமென்ட்டை மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். நாகார்ஜுனாவின் 100வது படத்தில் தபுவின் கதாபாத்திரம் கதையின் திருப்புமுனைகளுக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. மற்ற இரண்டு கதாநாயகிகள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
தபுவை காதலித்த நாகார்ஜுனா
நடிகர் நாகார்ஜுனாவும், நடிகை தபுவும் ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். சில காரணங்களால் இந்த காதல் கைகூடவில்லை. இதன்பின் நாகார்ஜுனா அமலாவை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். ஆனால் நாகார்ஜுனா மீதுள்ள காதலால், இன்று வரை யாரையும் திருமணம், செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார் தபு. அவருக்கு தற்போது வயதும் 50ஐ தாண்டி விட்டது. இருந்தாலும் குறையாத இளமையோடு காட்சியளிக்கிறார் தபு.