வேலூரில் கிராமசபைக் கூட்டத்தில், கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாகினர் விஜய் சென்றுவிட்டார் என MP கதிர் ஆனந்த் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், கிராம சபைக் கூட்டத்தில் உள்ளூர் பிரச்சினையை பேசுங்கள் என எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

வேலூர்மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள மேல்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் மேல்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் இளவரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் பேசினர். இக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின், உதயநிதிக்கு பொறுப்பை கொடுத்து அப்பா செய்ததை, தாத்தா செய்ததை நீ செய்ய வேண்டுமென சொன்னார். கரூரில் 41 பேர் இறந்து போனார்கள். பக்கத்து வீட்டில் யாராவது உயிரிழந்தால் நாம் சோறு கூட சாப்பிட மாட்டோம். கஷ்டத்தை பகிர்ந்துகொள்கிறோம். யாரோ நடிகர் வந்தார் என பார்க்க சென்றவர்கள் செத்துவிட்டார்கள் என முதல்வர் சொல்லிவிடலாம்.

ஆனால் முதல்வர் அப்படியில்லை அந்த நடிகர் ராத்தியுடன் ராத்திரியாக ஊரைவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இரவு ஒன்றரை மணிக்கு கரூர் சென்று நூற்றுக்கணக்கான உயிரை காப்பாற்றியவர் நம் முதலமைச்சர். இக்கிராம சபை நாம் எடுக்க வேண்டியது தீர்மானமில்லை, வயதானவர்கள், கர்ப்பிணிகள் வாழ்த்தினால் பலன் உண்டு. நீங்கள் உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் என பேசிய போது ஆனந்த் என்ற நபர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இதனை நீங்கள் கிராம சபை கூட்டத்தில் பேசுவது தவறு.

நீங்கள் மக்கள் பிரச்சணையை பேசுங்கள் இது கட்சி மேடையில்லை. நீங்கள் மக்கள் பிரச்சணையை மட்டும் பேசுங்கள் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திமுகவினர் அந்த நபரை சூழ்ந்துகொண்டு வாக்குவாதம் செய்ததுடன் காவல்துறையை விட்டு வெளியேற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.