- Home
- Politics
- அறிவாலயத்தின் கதவை தட்டிய ராமதாஸ்..! திருமா-வால் திணறும் ஸ்டாலின்..! பாமகவின் டபுள் மூவ்..!
அறிவாலயத்தின் கதவை தட்டிய ராமதாஸ்..! திருமா-வால் திணறும் ஸ்டாலின்..! பாமகவின் டபுள் மூவ்..!
ராமதாஸ் மீது அண்மைக் காலமாக திருமாவளவன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராமதாசை எல்லோரும் நேரில் போய் நலம் விசாரித்தனர். ஆனால், திருமாவளவன் மட்டும் நேரில் சென்று நலம் விசாரிக்காமல் தொலைபேசி மூலமாக விசாரித்தார்.

பாமகவின் வன்னியர் சமூக வாக்கு வங்கி முக்கியம் என நினைக்கிறது அதிமுக. பாமக அதிமுகவுடன் 2019 மக்களவை தேர்தலில் கூட்டணி வைத்தது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியில் பாமக தொடர்ந்தது. ராமதாஸ் இதை ‘இயற்கை கூட்டணி’ எனக்கூறி வருகிறார்.
பாமக உள் விவகாரத்தால் ராமதாஸ் அதிமுக-உடன் கூட்டணி விரும்பினாலும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் பாஜக- அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்புகிறார். ஆகவே ரூட் மாறி திமுக கூட்டணியில் இணைய காய்களை நகர்த்தி வந்தார் ராமதாஸ். இந்நிலையில், ராமதாஸ் திமுக-உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறினாலும் அதற்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
திமுக பொது மீது பாசத்தோடு இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டணிக்கு வரும் முடிவை அறிவாலயத்திடம் தெரியப்படுத்தி இருக்கிறார். ஆனால் அறிவாலயமோ, ‘‘நீங்கள் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் விருப்பம். அதே நேரத்தில் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கிற விசிக தலைவர் திருமாவளவன் பாமகவும், பாஜகவும் இருக்கிற கூட்டணியில் விசிக இருக்காது என்கிற கொள்கை முடிவை அறிவித்திருக்கிறார்.
அவரது கொள்கையின் முடிவில் தலையிடவோ, அவரை இழக்கவோ திமுக கூட்டணிக்கு விருப்பம் இல்லை. பாமக கூட்டணியை திமுக கூட்டணிக்கு இழுத்து வந்து வலுப்படுத்த எந்த தயக்கமும் இல்லை என்றாலும், திருமாவளவன் சம்மதித்தால் மட்டுமே கூட்டணியில் உங்களை சேர்ப்போம்’’ என்று கறாராக செல்லாமல், கரிசனத்தோடு சொல்லி இருக்கிறது திமுக தலைமை.
ராமதாஸ் மீது அண்மைக் காலமாக திருமாவளவன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராமதாசை எல்லோரும் நேரில் போய் நலம் விசாரித்தனர். ஆனால், திருமாவளவன் மட்டும் நேரில் சென்று நலம் விசாரிக்காமல் தொலைபேசி மூலமாக விசாரித்தார். இன்னும் திருமாவளவனுக்கு ஏதோ தயக்கம் இருக்கிறது என்று புரிந்து கொண்டுதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ராமதாஸை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு பேரும் அரை மணி நேரம் தனியாக அரசியல் பேசியதாகவும் கூறப்படுகிறது.
திருமாவளவன் திமுக கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால் இப்போது ராமதாஸ் அதிமுக பக்கம் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. கூடவே பாஜக தமிழக பொறுப்பாளரும், அப்போலோவில் ராமதாஸை சந்தித்ததும் கூட்டணிக்கான துவக்கம் என்று சொல்லப்படுகிறது.