புஸ்ஸி ஆனந்த் சிக்கினால் தவெக கதை கந்தல்..! முடிவோடு காத்திருக்கும் காவல்துறை..!
விஜயின் ஜனநாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்தும் நடித்து வருவதால் ஜனநாயகன் திரைப்படத்துக்கும், கரூருக்கு வந்த கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் அந்த படத்திற்காக ட்ரோன் கேமராவில் படப்பிடிப்பு நடத்தினார்களா?

கரூர் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான வழக்கில் குற்றவாளிகளாக புஸ்ஸி ஆனந்த் -A2 இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் -A3 கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் -A1 உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பின் புஸ்ஸி ஆனந்த் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தலைமறைவானார். 3 தனிப்படை போலீஸ் அமைத்து தீவிரத் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் புஸ்ஸி ஆனந்தை கைது செய்து போலீஸ் கஸ்டடி கேட்கும் திட்டத்தில் காவல்துறை இருப்பதாகக் கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசலுக்கும், ஜனநாயகன் பட ஷூட்டிங்கிற்ஜ்கும் என்ன தொடர்பு என்பது தான் காவல்துறையினரிடம் இருக்கும் முக்கிய கேள்வி. ஜாமின் கேட்டு தலைமறைவாக இருக்கும் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இருக்கும் இடம் காவல்துறையினருக்கும் தெரியும். அவர் போலீஸ் கண்காணிப்பு வளையத்திற்குள் தான் இருக்கிறார் என்கிறார்கள்.
இதுவரை தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் இப்போது விஜய்க்கு நெருக்கமான கடப்பா தொழிலதிபர் அரவணைப்பில் பெங்களூருவில் இருப்பதாக கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கிற வரை ஒவ்வொரு மாநிலமாக மாறி மாறிப்போகத் திட்டமிட்டு இருக்கிறார் என்றும் அவரது ஒவ்வொரு மூவையும் காவல்துறையினரும் கண்காணித்து, விட்டுப் பிடிக்கலாம் என நெருங்காமல் இருப்பதாக தகவல். உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், புஸ்ஸி ஆனந்தை உடனடியாக கைது செய்து கஸ்டடியில் எடுக்கப்போகிறது காவல்துறை.
கரூர் கூட்டத்திற்கான ஏற்பாட்டில் இருந்து, கூட்டத்திற்கு அனுமதி வாங்கிய வரைக்கும் புஸ்ஸி ஆனந்திடம் கேட்க வேண்டிய கேள்விகளை சிறப்பு விசாரணைக் குழுவும் தயார் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணை செய்தால் பல தலைப்புச் செய்திகள் வரும் என பேசிக்கொள்கிறார்கள். விஜய் கரூருக்கு ஏன் வந்தார்? என்றும் தாமதமாக வந்ததில் ஏதோ உள்நோக்கம் இருக்குமா? என்றும் புஸ்ஸி ஆனந்திடம் போலீஸ் தரப்பில் கேட்க உள்ளார்கள்.
விஜயின் ஜனநாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்தும் நடித்து வருவதால் ஜனநாயகன் திரைப்படத்துக்கும், கரூருக்கு வந்த கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் அந்த படத்திற்காக ட்ரோன் கேமராவில் படப்பிடிப்பு நடத்தினார்களா? என்றும் புஸ்ஸி ஆனந்திடம் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.