- Home
- உடல்நலம்
- Hot Water : வெந்நீர் உடம்புக்கு நல்லதுனு அதிகமா குடிக்கீங்களா? அப்போ உங்களுக்கு நீங்களே ஆப்பு வைக்கிங்கனு அர்த்தம்!
Hot Water : வெந்நீர் உடம்புக்கு நல்லதுனு அதிகமா குடிக்கீங்களா? அப்போ உங்களுக்கு நீங்களே ஆப்பு வைக்கிங்கனு அர்த்தம்!
அளவுக்கு அதிகமாக வெந்நீர் குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Hot Water Health Risks
தினமும் காலையில வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வெந்நீர் அருமருந்தாகும். மேலுன் இது செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக இயக்கி வயிறு உப்புசம், வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். ஆனால் இதை அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
வெந்நீர் அதிகமாக குடித்தால் ஏற்படும் விளைவுகள் :
1. சிறுநீரகம் பாதிக்கப்படும்
வெந்நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக குடித்தால் சிறுநீரகம் அதிகமாக வேலை செய்ய வேண்டும். நீண்ட காலமாக இது தொடர்ந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2. கல்லீரல் பாதிக்கப்படும்
கல்லீரல் பிரச்சனைகள் பாதிக்கப்பட்டவர்கள் சூடான நீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது கல்லீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி நிலைமையை இன்னும் மோசமாக்கும்.கல்லீரல் டேமேஜ் ஆனால் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகள் மோசமாக பாதிக்கப்படும்.
3. மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும் :
சூடான நீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் மூளையில் செயல்திறன் பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது, வெந்நீர் குடித்தால் மூளையில் இருக்கும் செல்களில் வீக்கம் ஏற்படும். இதனால் மூளை தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
4. தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும் :
இரவு நீங்கள் தூங்கும் சூடான நீர் குடித்தால் உங்களது தூக்கம் பாதிக்கப்படும். அதாவது இரவில் வெந்நீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். இதனால் உங்களது தூக்கம் கெடும்.
5. சளி மற்றும் இருமல்
உங்களுக்கு சளி மற்றும் இருமல் இருந்தால் அளவுக்கு அதிகமாக வெந்நீர் குடிக்க கூடாது. இல்லையெனில் தொண்டையில் வீக்கம் எரிச்சல் அதிகமாக ஏற்படும்.
6. நீர்ச்சத்து குறைபாடு
அளவுக்கு அதிகமாக சூடான நீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். அது மட்டுமல்லாமல் இரத்தத்தில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் சமநிலை பாதிக்கப்படும். இதனால் செல்களில் வீக்கம் ஏற்பட்டு, மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக தலைவலி உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
7. செரிமான மண்டலம் சேதமடையும்
நீங்கள் நீண்ட காலமாக அதிக சூடான நீரை குடித்தால் உங்களது செரிமான மண்டலம் மற்றும் உணவுக் குழாய் செய்தமடையும். இது தவிர உடலில் உள்ளுறுப்புகளில் நீண்ட கால பிரச்சனையை ஏற்படுத்தும்.
வெந்நீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதை அளவோடு குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.