அவனே ஓடிடுவான்..! விஜய் குறித்து நக்கீரன் கோபால் பகீர்
கரூர் போன்று இன்னும் 2 நிகழ்ச்சிகள் நடந்துவிட்டால் விஜய் தாமாகவே அரசியலை விட்டு ஓடிவிடுவார் அவரை யாரும் துரத்த வேண்டியதில்லை என மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் விமர்சித்துள்ளார்.

விஜய் அரசியலை விட்டே ஓடிவிடுவார்..
பிரபல நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “கரூர் சம்பவத்தை மையமாக வைத்து விஜய்யை அரசியலை விட்டே விரட்ட சிலர் செயல்படுவாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரை அரசியலை விட்டு விரட்ட நக்கீரன் கோபால் தேவையில்லை. கரூர் போன்று இன்னும் 2 நிகழ்ச்சிகள் நடைபெற்றுவிட்டால் அவரே தாமாக ஓடிவிடுவார்.
பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே நியாயம்
வெகுஜன விரோதிகளை நக்கீரன் விட்டு வைக்காது. விஜய் வெகுஜன விரோதி. கரூரில் 41 பேர் உயிரிழந்து கிடக்கின்றனர். அவர்களைக் கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் சென்ற ஒருவர் 13 நாட்களுக்கும் மேலாக வீட்டைவிட்டே வெளியே வராமல் தலைமறைவாக இருக்கிறார். அவரை சிலர் சிவப்பு கம்பலம் விரித்து வரவேற்கின்றனர். நான் இப்படிப்பட்ட வேலையை செய்ய மாட்டேன். அரசியலில் நடுநிலை என்ற ஒன்று கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே நியாயம். நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
ரூ.20 லட்சம் வரும் வரை விஜய்க்கு ஆதரவாக பேசுவார்கள்..
கரூரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களே சிலர் விஜய்யை குற்றம் சொல்ல வேண்டாம், அவர் என்ன செய்வார் என்று கேள்வி கேட்கின்றனர். விஜய் அறிவித்த ரூ.20 லட்சம் இழப்பீடு வரும் வரை தான் அப்படி பேசுவார்கள்.
சாட்சியங்களை கலைக்கும் விஜய்..?
உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாட்சியங்கள். அவர்களுடன் விஜய் எப்படி பேச முடியும். அவர் மீது சிறப்பு விசாரணை குழு வழக்கு பதிவு செய்திருக்கும் பட்சத்தில் அவரது செயல்பாடுகள் சாட்சியங்களைக் கலைக்கும் முயற்சி என்று கருதப்படும். ஆனால் சிறப்பு விசாரணை குழு அதனை செய்யவில்லை. இதனால் விஜய் தப்பித்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.