நடிகர் நெப்போலியன் தவெக தலைவர் விஜய்யை அடிக்க பாய்ந்தார் என்று திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கியது முதல் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற அவர் முதல்வர் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து கரூரில் விஜய்யின் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட திமுக, விஜய் மீது தொடர்ந்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது.அ

விஜய் மீது திமுக கடும் விமர்சனம்

'விஜய் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல் ஓடி ஒளிந்து விட்டார். 41 பேர் பலியானதற்கு காரணமான விஜய்யை கைது செய்ய வேண்டும்' என ஏகப்பட்ட விமர்சனங்களை திமுகவினர் வைத்து வருகின்றனர். மேலும் விஜய் சினிமாவில் நடித்தபோது யாரையும் மதிக்க மாட்டார் என்றவென்றவெல்லாம் பழைய கதைகளை திமுகவினர் கூறி வருகின்றனர்.

விஜய்க்கு அகங்காரம் அதிகம்

இந்நிலையில், நடிகர் நெப்போலியன் விஜய்யை அடிக்க பாய்ந்தார் என்று திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த குடியாத்தம் குமரன், ''முதன் முதலில் விஜய்யை வச்சு செய்தது அண்ணன் நெப்போலியன் தான். விஜய்க்கு அகங்காரம் அதிகம். 10 காட்டெருமைக்கு இருக்கும் கொழுப்பு விஜய்க்கும் இருக்கிறது.

போக்கிரி படத்தின்போது நடந்த சம்பவம்

போக்கிரி படத்தின்போது இந்த சம்பவம் நடந்தது. போக்கிரி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது கேரவனில் விஜய் இருந்தார். போக்கிரி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த நெப்போலியன் அவரை பார்க்க சென்றார். அப்போது விஜய்யின் உதவியாளர் அவரை கேரவனுக்குள் விடவில்லை. இதனால் கோபம் அடைந்த நெப்போலியன், 'கதவை திற' என்று சத்தம் போட்டார்.

விஜய்யை அடிக்க பாய்ந்த நெப்போலியன்

இந்த சத்தம் கேட்டு விஜய் வெளியே வந்தார். அப்போது நெப்போலியன் விஜய்யிடம், ''என்னை உள்ளே விட மாட்டேன் என்கிறார்'' என்றார். அதற்கு விஜய், 'நான் என்ன சொன்னனோ அதைத்தான் அவர் செய்வார்' என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நெப்போலியன் விஜய்யின் முகத்தில் கையால் ஓங்கி குத்த சென்றார். அங்கு இருந்தவர்கள் அவரை பிடித்து சமாதானப்படுத்தினார்கள்'' என்று தெரிவித்தார்.