MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுனா தொலைச்சிடுவீங்களா....? பிரச்சினையே நீங்க தான்.. அன்புமணிக்கு எதிராக பாமக பரபரப்பு அறிக்கை

ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுனா தொலைச்சிடுவீங்களா....? பிரச்சினையே நீங்க தான்.. அன்புமணிக்கு எதிராக பாமக பரபரப்பு அறிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு ஏதாவது ஆச்சு என்றால் சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்துள்ள அன்புமணி தான் ராமதாஸ்ன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொந்தரவு என பாமக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2 Min read
Author : Velmurugan s
Published : Oct 11 2025, 07:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்ற பெயரில்..
Image Credit : Asianet News

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்ற பெயரில்..

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சென்ற மாதம் நீக்கப்பட்ட மருத்துவர் அன்புமணி அவர்கள் தன்னை ஆதரிப்பவர்கள் மத்தியில் நேற்று (10.10.2025) ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். அது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பல செய்திகளை அவரது ஆதரவாளர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி எல்லாம் நமக்கு பெரிய விமர்சனம் ஏதுமில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள்
Image Credit : x

நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள்

ஆனால் அண்மையில் மருத்துவர் அய்யா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்த போது பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தனர். ஓரிரு பாமகவினரை தவிர மீதி அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்து சென்றார்கள். வர இயலாதவர்கள் தொலைபேசி மூலமும், அறிக்கைகள் வழியாகவும் அய்யா அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரியப்படுத்தினார்கள்.

Related Articles

Related image1
ராமதாஸ் என்ன கண்காட்சியா.? அவருக்கு ஏதாவது ஆச்சுனா தொலைத்து விடுவேன்- பாசத்தில் பொங்கிய அன்புமணி
Related image2
அறிவாலயத்தின் கதவை தட்டிய ராமதாஸ்..! திருமா-வால் திணறும் ஸ்டாலின்..! பாமகவின் டபுள் மூவ்..!
36
ராமதாஸ்க்கு அனைத்து தொந்தரவும் அன்புமணியால் தான்..
Image Credit : X

ராமதாஸ்க்கு அனைத்து தொந்தரவும் அன்புமணியால் தான்..

இது குறித்து 10.10.2025 அன்று நடந்த அக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி அவர்கள் பேசும் போது அய்யாவை வைத்து ( எக்சிபிஷன்) கண்காட்சி நடத்துகிறார்கள் என்றும் மேலும் அய்யாவுக்கு ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். மருத்துவர் அய்யா அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏதாவது தொந்தரவு ஏற்படுமென்றால் அது மரு.அன்புமணி அவர்களால் மட்டுமே ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே, மருத்துவர் அய்யா அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு தொந்தரவுகளையும், அவமரியாதைகளையும் கொடுத்தது உலகமறிந்த ஒன்று. தற்போது மருத்துவர் அன்புமணியின் பேச்சு அய்யா அவர்களின் மனதை பெரிதும் காயப்படுத்தியுள்ளது.

46
மருத்துவமனைக்கு வரச்சொல்லி யாரையும் அழைக்கவில்லை
Image Credit : x

மருத்துவமனைக்கு வரச்சொல்லி யாரையும் அழைக்கவில்லை

தமிழ்நாட்டின் முதல்வர் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அய்யா அவர்கள் மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை அறிந்து அவர்களாகவே வந்து சந்தித்து நலம் பெற விசாரித்து சென்றிருக்கிறார்கள். யாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வரவில்லை. அதற்கான தேவையும் இல்லை. தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் அய்யா அவர்கள் மீது கொண்ட அக்கறை, மதிப்பு ஆகியவற்றின் காரணமாகவே நலம் விசாரித்து சென்றனர்.

56
மிரட்டும் அன்புமணி
Image Credit : Asianet News

மிரட்டும் அன்புமணி

மருத்துவர் அன்புமணி அவர்கள் மருத்துவமனைக்கு வந்த தலைவர்களை கண்காட்சி காண வந்தவர்கள் என்று பேசி இருப்பது உண்மையிலேயே அந்த தலைவர்களை அவமதிப்பது போன்றதாகும். அதையும் தாண்டி தொலைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுப்பது தரம் தாழ்ந்த சொல்லாகும். நீங்கள் வரவில்லை. பார்க்கவில்லை. என்பதெல்லாம் உங்களுடைய தனிப்பட்ட விஷயம்.

66
மலிவான விமர்சனங்களை கைவிடுங்கள்
Image Credit : Google

மலிவான விமர்சனங்களை கைவிடுங்கள்

ஆனால் மருத்துவர் அய்யா அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க வந்த தலைவர்களை பழித்து பேசுவது, கண்காட்சி பார்க்க வந்தவர்கள் என்று பேசுவது மிகவும் கீழ்த்தரமான, நாகரீகமற்ற விமர்சனமாக இருக்கிறது. மருத்துவர் அய்யா அவர்கள் தனது பெயரை கூட போட்டுக் கொள்ளக் கூடாது என்று பகிரங்கமாக அறிவித்து விட்ட சூழலில் மருத்துவர் அன்புமணி, மருத்துவர் அய்யா அவர்களை மருத்துவமனையில் சந்தித்தவர்கள், நலம் வேண்டியவர்கள் மீதான விமர்சனம் எல்லை மீறியதும் , பிற தலைவர்கள் அய்யா மீது கொண்டுள்ள அக்கறை, மரியாதையை கேள்விக்கு உள்ளாக்கி அதனை சிதைக்கும் நோக்கம் கொண்டதாகும்.

இதனை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மருத்துவர் அய்யா அவர்கள் சார்பிலும் வன்மையாக கண்டிப்பதோடு, இனி இவ்வாறான மலிவான விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் மருத்துவர் அன்புமணி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இராமதாஸ்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சட்டப்பேரவையில் அரங்கேறிய அரசியல் நாகரிகம்: முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து!
Recommended image2
TN Politics: 60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்.. ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்!
Recommended image3
Now Playing
முதல்வர் விஜய் குறித்து பிரேமலதா விஜயகாந்த் முக்கிய கருத்து! | DMDK Premalatha on CM Vijay
Related Stories
Recommended image1
ராமதாஸ் என்ன கண்காட்சியா.? அவருக்கு ஏதாவது ஆச்சுனா தொலைத்து விடுவேன்- பாசத்தில் பொங்கிய அன்புமணி
Recommended image2
அறிவாலயத்தின் கதவை தட்டிய ராமதாஸ்..! திருமா-வால் திணறும் ஸ்டாலின்..! பாமகவின் டபுள் மூவ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved