- Home
- Lifestyle
- Parenting Tips : உங்க குழந்தை அடிக்கடி மண் சாப்பிடுறாங்களா? இதுதான் காரணம்; உடனே மாத்தினா மண் பக்கமே போகமாட்டாங்க
Parenting Tips : உங்க குழந்தை அடிக்கடி மண் சாப்பிடுறாங்களா? இதுதான் காரணம்; உடனே மாத்தினா மண் பக்கமே போகமாட்டாங்க
குழந்தைகள் அதிகம் மண் சாப்பிட சில காரணங்கள் இருக்கின்றன. அதை சரி செய்தால் அவர்கள் மண் சாப்பிடுவதை நிறுத்திவிடுவார்கள்.

குழந்தைகள் ஒரு வயதில் இருந்து இரண்டு வயது வரைக்குமே பார்க்கும் அனைத்தையும் வாயில் வைப்பது, கையில் எடுப்பது என ஆர்வமாக இருப்பார்கள். இந்த வயதுக்கு பின் கூட சில குழந்தைகள் இதே பழக்கத்தை வைத்திருப்பார்கள். சில குழந்தைகள் சாப்பிட வேண்டிய உணவை தவிர்த்து மண்ணை அள்ளி தின்பார்கள். இப்படி கையில் கிடைக்கும் தூசு, மண் போன்ற பொருட்களை உண்பது பைகா (Pica) என அழைக்கப்படுகிறது. இதற்கான காரணம் தடுக்கும் முறையை இங்கு காணலாம்.
குழந்தைக்கு போதுமான இரும்புச்சத்து கிடைக்காவிட்டால் அதை பதிலீடு செய்ய மண் போன்ற பொருட்களை சாப்பிடத் தூண்டப்படுவார்கள். இரும்புச்சத்து மட்டுமல்ல, துத்தநாகம் (Zinc), கால்சியம் (Calcium) ஆகிய அத்தியாவசிய தாதுக் குறைபாடும் மண் சாப்பிடும் பழக்கத்தைத் தூண்டக் கூடும். இந்தக் குறைப்பாட்டை தவிர்த்தால் குழந்தைகள் மண் சாப்பிடுவதை விட்டுவிடுவார்கள்.
சில குழந்தைகளுக்கு மன அழுத்தம், விரக்தி, கவலை, சலிப்பும் இருக்கலாம். அதை தவிர்க்க மண் சாப்பிடுவார்கள். இது ஒருவிதமான ஆறுதலை வழங்கும். பெற்றோருடைய கவனத்தை ஈர்க்கவும் இப்படி செய்வார்கள். இதுதான் காரணம் என கண்டறிந்தால் அதை எளிதில் தீர்க்க முடியும். இதற்கு பெற்றோர் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் மண் சாப்பிடுவதை பெற்றோர் கவனித்தால் முதலில் மருத்துவரிடம் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு ரத்த பரிசோதனை மூலம் அவர்களுக்கு இரும்புச் சத்து, அல்லது துத்தநாக சத்துக் குறைபாடு இருப்பது கண்டறியப்படும். இதன் மூலம் விரைவில் அந்த பழக்கத்தை நிறுத்த முடியும்.