- Home
- Lifestyle
- Parenting Tips : குழந்தைங்க காய்கறி சாப்பிட அடம்பிடிக்குறாங்களா? பிடிக்காததை கூட விரும்பி சாப்பிட இதை செய்ங்க!
Parenting Tips : குழந்தைங்க காய்கறி சாப்பிட அடம்பிடிக்குறாங்களா? பிடிக்காததை கூட விரும்பி சாப்பிட இதை செய்ங்க!
குழந்தைகள் அடம்பிடிக்காமல் காய்கறிகளை விரும்பி சாப்பிட என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளை இங்கு காணலாம்.

ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வைக்க படாதபாடுபடுகிறார்கள். ஆனால் குழந்தைகளை விரும்பாத உணவை சாப்பிட வைக்கவும் சில ட்ரிக்ஸ் இருக்கிறது. அவர்கள் அடம்பிடிக்காமல் பிடிக்காத காய்கறிகளைக் கூட விரும்பி சாப்பிட வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளை இங்கு காணலாம்.
2011இல் செய்யப்பட்ட ஓர் ஆய்வு, தொடர்ந்து ஒரு காய்கறியை கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பது குழந்தைகளை அதை ஏற்றுக் கொள்ள வைக்கும் என நிரூபித்துள்ளது. அந்தக் காயை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தாமல் ஆர்வத்தை தூண்டும் செயல்களை செய்யலாம். உதாரணமாக அந்த காயை நீங்கள் ரசித்து, ருசித்து சாப்பிட்டால் அவர்களுக்கும் ஆர்வம் வரும்.
குழந்தைகளை காய்கறி சாப்பிடச் சொல்லி தினம் கட்டாயப்படுத்தக் கூடாது. தினமும் அதை உணவில் சேர்த்துக் கொள்தல் போதுமானது. காய்கறிகள் அல்லது பழங்களை குறைந்தபட்சம் 8 முதல் 10 தடவை வெவ்வேறு நாட்கள் கொடுத்தாலே அவர்களுக்கு பழகிவிடும்.
காய்கறி சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்துதல், தண்டனை கொடுத்தல் அவர்களுக்கு காய்கறி மீது வெறுப்பு வரவைக்கும். கூடவே மன அழுத்தம் வரலாம். அதற்கு பதில் காய்கறியின் சுவையை குழந்தைக்கு அறிமுகம் செய்யலாம். நீங்கள் ரசித்து உண்ணலாம். அவர்களுக்கு பிடிக்காத காய்களை தேர்வு செய்து வித்தியாசமான ரெசிபி மூலம் அறிமுகப்படுத்தலாம்.
உதாரணமாக புடலங்காய் பிடிக்காத குழந்தைக்கு உருளைக்கிழக்கு பிடிக்கலாம். அதை இரண்டும் சேர்த்து கூட்டு செய்து கொடுக்கலாம். வாரத்தில் ஒருதடவை கொடுக்கலாம். பின் சுவை பிடித்தால் அவர்களே கேட்பார்கள். குழந்தைகளிடம், ஒருமுறை இந்த காய் சாப்பிட்டு பார்.. பிடிக்கலன்னா வேண்டாம் என சொல்லி கொடுங்கள். கட்டாயமாக சாப்பிடச் சொல்லவேண்டாம்.